Published:Updated:

`கஷ்டத்தை புரிஞ்சி, வீட்டிலிருந்து படிச்சேன்; இப்படி பண்ணிட்டாங்க'- கேரளாவுக்கு நீட் எழுதச்செல்லும் மாணவர் குமுறல்

திருச்சி ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் ஆட்டோ டிரைவரான இவர், தனது ஒரே மகனான நித்தீஷை மருத்துவராக்க வேண்டும் எனத் துடித்தார். அதனால் திருச்சி கேம்பியன் பள்ளியில் தனது மகனைச் சேர்த்துப் படிக்க வைத்தார். நித்தீஷும் படிப்பில் சுட்டி. பத்தாம் வகுப்பில் 447 மதிப்பெண் எடுத்தார். மருத்துவர் கனவோடு வளர்ந்த நித்தீஷின் வாழ்வில் நீட் தேர்வு மூலம், பேரிடி விழுந்துள்ளது. நீட் தேர்வுக்குப் படிக்க கோச்சிங் சென்டரில் சேர வசதியில்லாமல் வீட்டிலிருந்தே படித்திருக்கிறார். இப்போது தேர்வு எழுத எர்ணாகுளம் ஒதுக்கப்பட்டுள்ளது. ``என்ன செய்வதுன்னு தெரியல'' என்று வேதனையுடன் கூறுகிறார் நித்தீஷின் தந்தை ஆட்டோ டிரைவர் செந்தில். அவரிடம் பேசுகையில், ``முன்பைப்போல ஆட்டோ தொழில் இப்போ இல்ல. ஓலா ஆட்டோ வந்தபிறகு தினசரி வருமானம் ரொம்ப குறைவாகிடுச்சு. நித்தீஷை கஷ்டப்பட்டு ஆளாக்கிட நினைத்து, அவனை நீட் கோச்சிங் மையத்தில் சேர்த்துவிட முயற்சி செய்தோம். கோச்சிங் சென்டரில் 35 ஆயிரம் வரைக் கட்டணமாகக் கேட்டார்கள். அந்தப் பணத்தைக் கட்ட முடியல. அதனால்  அவன் வீட்டோடு இருந்து படித்து வருகிறான்.

இந்நிலையில் அவனுக்கு எர்ணாகுளம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நீட் தேர்வு மையம் ஒதுக்கியுள்ளார்கள். நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டவுன்லோடு பண்ணிட்டு, ரயில் புக் பண்ணப் போனோம். முன்பதிவு முடிந்து, வெயிடிங் லிஸ்ட் அதிகமாக இருந்தது. அதனால் டிக்கெட் புக் பண்ண முடியவில்லை. அதோடு தேர்வுக்கு முன்னதாகவே, எர்ணாகுளத்துக்குச் சென்று ரூம் எடுத்து தங்கி பரீட்சை எழுதும் அளவுக்குக் கையில் பணமில்லை. அதனால் என்ன பண்ணுவதென்று தெரியல. நண்பர்களிடம் உதவி கேட்டுள்ளோம். நித்தீஷை நீட் தேர்வு எழுதவைக்கவே இவ்வளவு கஷ்டமாக இருக்கு. அடுத்து என்ன பண்ணுறதுன்னு தெரியல'' என வேதனை தெரிவித்தார்.

மாணவர் நித்தீஷ் கூறுகையில், ``கோச்சிங் சென்டரில் சேர்த்துவிட பணமில்லை என அப்பா சொன்னதும், அவரின் கஷ்டத்தை புரிஞ்சிக்கிட்டு, வீட்டிலிருந்து படிச்சேன். ஆனால், பரீட்சை எழுத எர்ணாகுளம் போகணும். அங்க போயி இடம் தேடி அலையணும்னு, தெரியாத ஊரில், மொழி தெரியாமல் என்ன செய்யப்போகிறோம் என நினைக்கும்போதே கஷ்டமாக இருக்கு” என்றார் வேதனையுடன்.

`கஷ்டத்தை புரிஞ்சி, வீட்டிலிருந்து படிச்சேன்; இப்படி பண்ணிட்டாங்க'- கேரளாவுக்கு நீட் எழுதச்செல்லும் மாணவர் குமுறல்

இறுதியாக நாம் சந்தித்த துறையூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த மூங்கில் வியாபாரியான ராஜ்மோகன் என்பவரின் மகன் ரித்தீஷ்ராஜ். அவர் நம்மிடம், ``அப்பா பி.எஸ்சி கெமிஸ்டிரி படிச்சிருக்காங்க. மேல படிக்க வசதியில்லாமல், மூங்கில் கடை வைச்சிருக்காங்க. துறையூர் ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்பில் 445 மதிப்பெண் எடுத்தேன். பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மார்க் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. டாக்டருக்குப் படிக்க நீட் தேர்வு கொண்டு வந்ததிலிருந்து எங்களைப் போன்ற கிராமப் புற மாணவர்களுக்கு மருத்துவராக வாய்ப்புக் கிடைக்குமா? எனக் கஷ்டமாக இருந்தது.

ஆனாலும் நம்பிக்கையை இழக்காமல், நீட் தேர்வுக்குத் தயாராக முடிவெடுத்தேன். அடுத்து  திருச்சியில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து கடந்த ஒருமாதமாக நீட் தேர்வுக்காக விடுதியில் தங்கிப் படித்து வருகிறேன். அதற்கான கட்டணத்தை அப்பா ரொம்பக் கஷ்டப்பட்டு கட்டினார். நல்லபடியாக நீட் பரிட்சையை எழுதிட்டா குடும்பக் கஷ்டம் தீர்ந்துடும்னு நினைத்திருந்தோம். ஆனால் திடீர்னு நீட் தேர்வு மையம் கேரளா மாநிலத்தில் போட்டிருப்பதாக அப்பா கூறினார். அதுல இருந்து படிக்கவே மனசு வரல. எங்க போயி என்ன பண்ணப் போகிறோம்னு நினைத்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கு. எங்களைப் போன்ற மாணவர்களின் கஷ்டத்தை இந்த அரசாங்கம் நினைத்துக் கூட பார்க்காதா சார்” என்றார் தலையில் அடித்தபடி.

அடுத்த கட்டுரைக்கு