Published:Updated:

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கக்கோரி மனு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கக்கோரி மனு!
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கக்கோரி மனு!

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் மதுரை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கோரிக்கை அளிக்கும் போராட்டம் நடத்தினர். 


இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய இந்திய மாணவர் சங்க நிர்வாகி செல்வா, "கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படுவதை முறைப்படுத்தவும் கண்காணிக்கவும் கூடுதலாகக் கட்டணம் வாங்காமல் தடுக்கவும், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளிடம் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அது மட்டுமல்லாமல் அரசு நிர்ணயித்த பள்ளி கட்டணத்தைவிட அதிகமாக வசூல் செய்தும், சிறப்பு பயிற்சிகள் நடத்துவதாகக் கூறி அதற்காகத் தனியாகக் கட்டணம் வசூல் செய்யும் தனியார் பள்ளிகள்மீது நடவடிக்கை எடுக்கும்படியும் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வித்துறை அதிகாரியிடம் கோரிக்கை வைக்கும் போராட்டத்தை நடத்தி, அவர்களிடம் மனு அளித்துள்ளோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு