Published:Updated:

விரைவில் விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் - முதல்வர் அறிவிப்பு!

SAKTHIVEL MURUGAN G
விரைவில் விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் - முதல்வர் அறிவிப்பு!
விரைவில் விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் - முதல்வர் அறிவிப்பு!

``மாநிலத்தில் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில், விரைவில் பல்மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்" என தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்  

பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகரில் கல்வித்திருவிழா (15.07.2018) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ``சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்த காமராஜர், நாடு போற்றும் தனித்தன்மைத் தலைவராக உயர்ந்திருக்கிறார். முறையாகக் கல்வி கற்கவில்லை என்றாலும், கல்விக்காக அதிக திட்டங்களை வகுத்திருக்கிறார். காமராஜர் முதலமைச்சராகப் பதவி வகித்த ஒன்பது ஆண்டுகளில், தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறார்" என்று புகழாரம் சூட்டிய முதலமைச்சர், ``விருதுநகரில் விரைவில் பல்மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்" என்றும் அறிவித்திருக்கிறார். 

மேலும், ``மாநிலத்தில் 80 சதவிகிதத்துக்கு மேல் கல்வி அறிவுபெற்ற மாநிலமாகத் தமிழகம் விளங்குவதற்குக் காரணமாக இருந்தவர் முன்னாள் முதலமைச்சர் காமராஜர்தான். மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. நாட்டிலேயே உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம்" என்றார். 

`தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், காமராஜரின் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி தினமாகக் கொண்டாட வேண்டும்' என்று பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.