Published:Updated:
பரீட்சை எழுத வந்த மாணவிக்கு திடீர் பிரசவம் - இது உ.பி. ஸ்டைல்!


லக்னோ: பரீட்சை எழுத வந்த மாணவி குழந்தையை பிரசவித்தால் எப்படி இருக்கும்?. இப்படியொரு சம்பவம் உ.பி.யில் நடந்திருக்கிறது
உத்தரபிரதேச மாநிலம் அசம்கார் மாவட்டம் சதியவ் என்ற இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கே, பூனம் ஷானி என்ற மாணவி இன்று சமஸ்கிருத தேர்வு எழுத வந்தார். 20 வயதான அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று காலையில் அவர் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, திடீரென பிரசவ வலி ஏற்பட்டு துடித்திருக்கிறார். அங்கிருந்த ஆசிரியர்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்குள்ளாகவே பூனம் ஷானி அழகான ஆண் குழந்தையை
##~~## |
பிரசவித்தார். அதன் பிறகு தாயும் சேயும் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே அட்மிட் செய்யப்பட்டனர். அம்மாவும் மகனும் இப்போது ஆரோக்கியமாக இருப்பதாக தகவல்.
பூனம் ஷானிக்குத்தான் பரீட்சையை முழுமையாக எழுதி முடிக்கமுடியவில்லை!
- குளஸ்