Published:Updated:

'அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க யோசனை வழங்குங்கள்' - அமைச்சர் ஆவேசம்

நவீன் இளங்கோவன்
'அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க யோசனை வழங்குங்கள்' - அமைச்சர் ஆவேசம்
'அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க யோசனை வழங்குங்கள்' - அமைச்சர் ஆவேசம்

''கூடுதலான செலவு ஏற்பட்டாலும், அரசுப் பள்ளிகளை மூடும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லை” என்று ஈரோட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பண்ணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “பள்ளிக் கல்வித்துறையில் தற்போது பல மாற்றங்கள் செய்யப்பட்டுவருகின்றன. அனைத்து பெற்றோர் ஆசிரியர் சங்கங்களையும் சிறப்பாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அரசுப் பள்ளிகளை மூடுகின்ற எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “ 'பள்ளிக்கூடங்களை மூடினால் போராட்டம் நடத்துவேன்' என்று சொல்லக்கூடியவர்கள், அரசுப் பள்ளிகளில் மாணவர்களை எப்படி கூடுதலாகச் சேர்ப்பது, ஒரு பள்ளிக்கு குறைந்தபட்சம் 50 மாணவர்களாவது இருக்கின்ற வகையில் எப்படி சீரமைப்பது? போன்ற ஆலோசனைகளை அரசுக்கு வழங்கினால் சிறப்பாக இருக்கும். இந்தியத் துணைக் கண்டத்திலேயே இல்லாத அளவுக்கு தமிழகத்தில்தான் 3 லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் இருக்கின்றனர். ஆசிரியர்கள் மீது ஏதேனும் தவறான புகார்கள் வரும் பட்சத்தில், வருங்காலத்தில் அதுபோன்று நடக்காத வகையில் வழக்குப்பதிவுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” என்றார்.