Published:Updated:

பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்படுகிறதா காஞ்சா அய்லய்யாவின் புத்தகங்கள்?! #DelhiUniversity

பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்படுகிறதா காஞ்சா அய்லய்யாவின் புத்தகங்கள்?! #DelhiUniversity
பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்படுகிறதா காஞ்சா அய்லய்யாவின் புத்தகங்கள்?! #DelhiUniversity

எழுத்தாளர் காஞ்சா அய்லய்யாவின் ‘Why I am not a Hindu,’ ‘Buffalo Nationalism’ மற்றும் ‘Post-Hindu India’ ஆகிய புத்தகங்களை, அந்தப் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்பதை டெல்லி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்விக் குழு, அழுத்தமாகப் பரிந்துரைத்திருக்கிறது. ”காஞ்சா அய்லய்யாவின் புத்தகங்கள் இந்துமதத்தை அவமதிப்பதாக இருக்கின்றன. இது, மாணவர்கள் படிக்கவேண்டிய புத்தகங்கள் அல்ல. அதனால் இது, பாடத்திட்டத்தில் இருக்கவேண்டிய அவசியமில்லை” என்று கமிட்டி உறுப்பினரும் பேராசிரியருமான ஹன்ஸ்ராஜ் சுமன் தெரிவித்திருக்கிறார். 'தலித்' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'பஹுஜன்', 'அம்பேத்கர்வாதி', 'பட்டியலினத்தவர்' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும் டெல்லி பல்கலைக்கழக கல்விக் குழு பரிந்துரைத்திருக்கிறது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு, ஜனநாயகத்துக்கு விரோதமான பரிந்துரைகளை அளித்திருப்பதாக அதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் காஞ்சா அய்லய்யா, “ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வின் திட்டமிட்ட சதிதான் இந்த பாடத்திட்ட நீக்க நடவடிக்கை. கல்விச் சுதந்திரத்தை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, வலதுசாரி கொள்கைகளை மட்டுமே திணிக்கும் நடவடிக்கை இது” என்று தெரிவித்திருக்கிறார்.

பல நூற்றாண்டுகளாக, அறிவுப் பெருக்கமும் கற்றலும், குறிப்பிட்ட சில பிரிவினருக்கானதாக மட்டுமே இருந்துவந்த நிலை மாறத்தொடங்கிவிட்டது. மறுபடியும், வரலாற்றை மறைப்பதன் மூலமும், கல்வியில் சாதிய, பாலின ஏற்றத்தாழ்வைத் திணிப்பதன் மூலமும், பண்பாட்டு சமூக அறிவில் ஒடுக்குமுறையும், மனிதமற்றதன்மைக்கு பாடத்திட்டத்தை  மாற்றுவதற்கு வழிவகுக்கிறார்கள் எனக் குற்றம் சாட்டியிருக்கிறார், அதே டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் துறை பேராசிரியர் என்.சுகுமார்.