Published:Updated:

ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு கிடைத்த டெபாசிட் பணம்! - விகடன் செய்தி எதிரொலியால் மாணவர்கள் மகிழ்ச்சி.

ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு கிடைத்த டெபாசிட் பணம்! - விகடன் செய்தி எதிரொலியால் மாணவர்கள் மகிழ்ச்சி.
ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு கிடைத்த டெபாசிட் பணம்! - விகடன் செய்தி எதிரொலியால் மாணவர்கள் மகிழ்ச்சி.

மதுரையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி கடந்த ஒன்றரை வருடமாக டெபாசிட் பணத்தைக் கொடுக்காமல் இழுபறி செய்து வந்த நிலையில், விகடன் டாட் காமில் 19.12.2018 அன்று வெளியிட்ட செய்தியின் எதிரொலியாக மாணவர்களுக்குப் பிடித்தம் போக மீதித் தொகையை கல்லூரி நிர்வாகம் வழங்கி வருகிறது.

ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு கிடைத்த டெபாசிட் பணம்! - விகடன் செய்தி எதிரொலியால் மாணவர்கள் மகிழ்ச்சி.

ஒன்றரை வருடமாக வலியுறுத்தியும் கிடைக்காத டெபாசிட் தொகை, செய்தி வெளியிட்ட ஒரே வாரத்தில் கிடைத்ததால் அந்தக் கல்லூரி மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இது குறித்துப் பேசிய மாணவர் கார்த்திக், ``நேத்து தான் எங்க பசங்க எல்லாம் காலேஜ்ல போய் செக் வாங்கிட்டு வந்திருக்காங்க. நாங்க 2017 பேட்ச்ங்கிறனால எல்லாரும் வேலை தேடி வேற வேற இடத்துல இருக்கோம். மதுரையில இல்லாதவங்க கிட்ட பாஸ்புக் ஜெராக்ஸ் கேட்டிருக்காங்க. நேர்ல வரமுடியாதவங்களுக்கு ஒரு மாசத்துக்குள்ள பிடித்தம் போக மீதித் தொகை  ஏறிடும்ன்னு சொல்லி இருக்காங்க. சின்ன முயற்சிதான். அதுக்கு வெற்றி கிடைக்கிறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று நம்பிக்கையுடன் பேசினார்.

ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு கிடைத்த டெபாசிட் பணம்! - விகடன் செய்தி எதிரொலியால் மாணவர்கள் மகிழ்ச்சி.

அதே கல்லூரியில் படித்த பாலாஜி என்ற மாணவர், ``இது ஒரு மாணவனோட பிரச்னை இல்ல. எங்க காலேஜ்ல மட்டுமே எங்க பேட்ச்ல கிட்டத்தட்ட 400 பேர் படிக்கிறோம். 4 வருஷம் முடிஞ்ச உடனே டெபாசிட் பணத்தை கொடுக்கணும். அதுதான் வழக்கம். ஆனா இங்க காலேஜ்ல அட்மிஷன் கம்மியா இருக்கு, அதனால பணம் கொடுக்கலன்னு சம்பந்தமே இல்லாம காரணம் காட்டிட்டு இருந்தாங்க. எங்களுக்கு வேற சப்போர்ட்டும் கிடைக்கல. இந்தச் செய்திக்குப் பிறகு இன்னிக்கு கல்லூரி நிர்வாகம் பணம் கொடுக்கிறதுனால எல்லாருக்கும் புது நம்பிக்கை வந்திருக்கு." என்றார்.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பல பொறியியல் கல்லூரிகளில் இருந்தும் இதேபோன்ற புகார்கள் எழுந்து வரும் நிலையில், பல்கலைக்கழகம் கல்லூரிகளின் மீது நடவடிக்கை எடுத்தாலும் இல்லாவிட்டாலும், 'எதிர்கேள்விகளால் மட்டுமே இது சாத்தியம்!' என நிரூபித்து இருக்கிறது இந்த நிகழ்வு.