Published:Updated:

மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: மருத்துவ படிப்பில் சேர இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு தேவையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வு (National Eligibility cum Entrance Test -NEET) நடத்த அகில இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்தது. இதற்கு, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனையடுத்து, தமிழகம் உட்பட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடர்ந்த வழக்குகள் உட்பட 23 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டன.

இந்த அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்குமாறு அகில இந்திய மருத்துவக் கவுன்சில் கோரியது. இதனையடுத்து, இந்த வழக்குகள் அனைத்தும் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டு வந்தன.

##~~##
இந்த வழக்குகள் அனைத்திலும், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவ படிப்பில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு நடத்திட இடைக்கால தடை விதித்தும், மருத்துவ படிப்பில் சேர இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு தேவையில்லை என்றும் இன்று உத்தரவிட்ட  உச்ச நீதிமன்றம், பழைய முறைப்படியே மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் என்றும், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடத்திய நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என்றும கூறி
இவ்வழக்கின் இறுதி தீர்ப்பை வருகிற ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தது.