Published:Updated:

இன்ஜினீயரிங்கில் எந்த கோர்ஸுக்கு மவுசு? கவுன்சலிங்கில் கவனிக்க வேண்டிவை என்னென்ன?

இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கவுன்சலிங் நடைபெறுகிறது. அது, பொதுமக்களுக்கு சில குழப்பத்தை ஏற்படுத்தலாம். மாணவர்கள் பெரும்பாலும் தனியார் பிரெளஸிங் சென்டர்களை கவுன்சலிங்குக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள், தங்களுக்கான துறையை, கல்லூரியை விருப்பத்தோடு தேர்வுசெய்துவருகிறார்கள். 12-ம் வகுப்பில் பயோ- மேக்ஸ்( Bio- Maths) கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் படித்தவர்கள் பெரும்பாலும் பொறியியல் துறையில்தான் கால் பதிக்க விரும்புவார்கள். பொறியியல் துறை, ஒவ்வொரு வருடமும் தனக்கே உரிய சாதக, பாதக அம்சங்களுடன் இயங்கிவருகிறது. சென்ற வருடம்போல் இல்லாமல் இந்த வருடம் ஆன்லைன் கவுன்சலிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்ஜினீயரிங்கில் எந்த டிபார்மென்ட்டுக்கு இந்த முறை மவுசு அதிகம்? கடந்த ஆண்டு இல்லாத புதிய டிபார்ட்மென்ட் என்னென்ன என்பது பற்றிப் பார்ப்போம். இதுகுறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தியிடம் பேசினோம். 

இன்ஜினீயரிங்கில் எந்த கோர்ஸுக்கு மவுசு? கவுன்சலிங்கில் கவனிக்க வேண்டிவை என்னென்ன?

``இன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைப்பதில்லை என்ற பொதுவழக்கு உருவாகிவிட்டது. ஆனால், நிறைய நிறுவனங்கள் தங்களிடம்  வேலைவாய்ப்புகள் இருப்பதாகவே சொல்கின்றன. தங்களுக்கு ஏற்ற வேலைகளைச் செய்யும் அளவுக்கு திறமையான பொறியாளர்கள் கிடைப்பதில்லை என்றே குறிப்பிடுகின்றனர். எனவே, வேலையில்லாத் திண்டாட்டம் என்பதல்ல... திறமையில்லாத் திண்டாட்டம் என்பதே நிலவுகிறது. பொறியியல் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்யவேண்டியதுள்ளது. ஐ.ஐ.டி-யில் ஆர்க்கிடெக்ட் படித்தவர்கள் ஐ.டி துறையில் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு தற்போது பொறியியல் பாடத்திட்டங்கள் உள்ளன. இதைக் கவனிக்கவேண்டிய காலச் சூழலும் இருக்கிறது. 

இன்ஜினீயரிங்கில் எந்த கோர்ஸுக்கு மவுசு? கவுன்சலிங்கில் கவனிக்க வேண்டிவை என்னென்ன?

தற்போது கவுன்சலிங் தொடங்கியுள்ளது. நிறைய கல்லூரிகளில் சில துறைகளுக்கான சீட்கள் குறைக்கப்பட்டுள்ளன. அக்ரிகல்ச்சுரல் இன்ஜினீயரிங் துறையில் சென்னை எம்.ஐ.டி-யில் 120 சீட்கள் இருந்தன. தற்போது அது 90 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த  சில ஆண்டுகள்போல் இல்லாமல் தற்போது அதிக அளவில் கம்ப்யூட்டர் மற்றும் ஐ.டி படிப்புகளைத் தேர்வுசெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. காரணம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிவில் மற்றும் மெக்கானிக்கல் படிப்புகளை அதிக மாணவர்கள் தேர்வுசெய்தனர். ஆனால், அந்தத் துறைகளைவிட  கம்ப்யூட்டர் மற்றும் ஐ.டி பிரிவுகளில் பிளேஸ்மென்ட் மூலம் நிறைய மாணவர்கள் வேலைக்குச் செல்வதால், அதை நோக்கியே நிறைய பேர் நகர வாய்ப்புள்ளது. இதைத் தவிர, சில அட்டானமஸ் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் அண்டு மேனேஜ்மென்ட் , கம்ப்யூட்டர் அண்டு கம்யூனிகேஷன் என்ற இரண்டு பாடப் பிரிவுகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த கோர்ஸை தேர்வுசெய்து படிப்பவர்களில் திறமையானவர்களுக்கு டி.சி.எஸ் நிறுவனம் ஊக்கத்தொகை வழங்கவும் வாய்ப்புள்ளது.

இன்ஜினீயரிங்கில் எந்த கோர்ஸுக்கு மவுசு? கவுன்சலிங்கில் கவனிக்க வேண்டிவை என்னென்ன?

கவுன்சலிங்கில் கவனம் தேவை:

இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கவுன்சலிங் நடைபெறுகிறது. அது, பொதுமக்களுக்கு சில குழப்பத்தை ஏற்படுத்தலாம். மாணவர்கள் பெரும்பாலும் தனியார் பிரெளஸிங் சென்டர்களை கவுன்சலிங்குக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், தேர்வுசெய்யும் கல்லூரியின் கட்டணத்தை கவனமாகக் கருத்தில்கொள்ள வேண்டும். அது அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கப்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அதேபோல் நிறைய கல்லூரிகளைத் தேர்வுசெய்ய ஆப்ஷன் உள்ளது. அதையும் கருத்தில்கொள்ள வேண்டும் " என்றார். 

இன்ஜினீயரிங்கில் எந்த கோர்ஸுக்கு மவுசு? கவுன்சலிங்கில் கவனிக்க வேண்டிவை என்னென்ன?

2016-2017 ஆண்டு  மொத்தம் 523 பொறியியல் கல்லூரிகளில் 2,76,842 சீட்கள் ஒதுக்கப்பட்டன. மாணவர்கள் தேர்வுசெய்த சீட்களின் எண்ணிக்கை 1,44,587. காலி இடங்கள் 1,32,255 ஆக இருந்தது. 

2017-2018 ஆண்டு மொத்தம் 518 பொறியியல் கல்லூரிகளில் 2,66,666 சீட்கள் ஒதுக்கப்பட்டன. 1,46,087 சீட்கள் மாணவர்களால் தேர்வுசெய்யப்பட்டன. 1,20,579 இடங்கள் காலியாக இருந்தன. 

2018-2019 ஆண்டு 501 பொறியியல் கல்லூரிகளில் 2,49,505 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் 1,12,032 இடங்கள் தேர்வுசெய்யப்பட்டன. 1,37,473 காலி இடங்கள். 

2019-2020 இந்த வருடம் 537 பொறியியல் கல்லூரிகளில் 2,00,000+ ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு எவ்வளவு சீட்கள் தேர்வுசெய்யப்படும் என்பது கவுன்சலிங் முடிந்த பிறகே தெரியவரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு