Published:Updated:

`காஷ்மீரிலிருந்து 24,000 பேர்’- முடிவடைந்தது நீட் தேர்வுக்கான விண்ணப்பக் கெடு!

இணையம் இல்லாமல் குறைவான நபர்களே விண்ணப்பிக்க முடிந்த நிலையில் 2 ஜனவரி 2020 அன்று காஷ்மீரின் புல்வாமா மற்றும் ஜம்முவின் அவந்திபுரா மாவட்டங்களில் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டன.

நீட் தேர்வு
நீட் தேர்வு

மருத்துவக் கல்விக்கான தேசிய நீட் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக ஜம்மு - காஷ்மீரில் இணைய சேவை கொடுக்கப்பட்டுள்ளது. நீட் 2020 தேர்வுக்கான விண்ணப்பங்கள் 2019 டிசம்பர் 2-ம் தேதி முதல் தொடங்கியது.

காஷ்மீர்
காஷ்மீர்

31 டிசம்பர் வரை விண்ணப்பம் செய்வதற்கான இறுதிக்கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், 6 ஜனவரி 2020 வரை விண்ணப்பத் தேதி நீட்டிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் 5-ல் மத்திய அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ முடக்கியது. இதனால் அங்கு இணைய வசதிகள் மற்றும் செய்தித்தொடர்பு வசதிகள் அத்தனையும் முடக்கப்பட்டிருந்தன. இதனால் காஷ்மீர் மாணவர்கள் மட்டும் இணைய வசதி அல்லாமல் 8 முக்கிய மையங்களில் நேரடியாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கடந்த 8 டிசம்பர் 2019-ல் அறிவிக்கப்பட்டது.

இருந்தும் இந்த வழியில் குறைவான நபர்களே விண்ணப்பித்திருந்தனர். இதனால் இந்த ஜனவரி 2-ம் தேதியன்று காஷ்மீரின் புல்வாமா மற்றும் ஜம்முவின் அவந்திபுரா மாவட்டங்களில் இணைய சேவை வழங்கப்பட்டது. இதை அவந்திபுரா மாவட்டக் காவல்துறையும் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

நீட்
நீட்

இதனால் இறுதிநாளான நேற்றுவரை மொத்தம் 24,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வரை நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருப்பதாக ஜம்முவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 2020-ம் ஆண்டுக்கான நீட் தேர்வுகள் மே 3-ம் தேதி நடைபெறவிருக்கிறது.