Published:Updated:

புதிய கல்விக் கட்டண விவரம் இணையத்தில் வெளியீடு

Vikatan Correspondent

சென்னை, ஜூன்.18,2011

தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்வி கட்டண விவரம், பள்ளிக்கல்வி இணையதளத்தில் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது. ##~~##

மேல்முறையீடு செய்த 6,355 தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்வி கட்டணத்தின்படி, அதிகபட்சமாக எல்.கே.ஜி.க்கு ரூ.15,400-ம், பிளஸ்-2-வுக்கு ரூ.25 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.ரவிராஜ பாண்டியன் குழு, திருத்தப்பட்ட புதிய கல்விக் கட்டணத்தை கடந்த 13-ம் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், திருத்தப்பட்ட புதிய கல்விக் கட்டண பட்டியல் மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இணைப்பு: http://www.pallikalvi.in/schools/schoolfeesstructure.htm