Published:Updated:

ஜூன் 23 முதல் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு!

விகடன் விமர்சனக்குழு
ஜூன் 23 முதல் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு!
ஜூன் 23 முதல் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு!
ஜூன் 23 முதல் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு!

சென்னை: வருகிற ஜூன் 23 ஆம் தேதி முதல் பொறியியல் (பி.இ.) படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 23  மற்றும் 24 ஆகிய தேதிகளில் விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு ஜூன் 25 ஆம் தேதியன்றும் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும். மேலும் தொழில் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 9 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தரவரிசை பட்டியல் தேதி

இதனிடையே பொறியியல் (பி.இ.) படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூன் 16 ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.