Published:Updated:

கொந்தளிப்பில் டெல்லி பல்கலைக்கழகம்; துணை வேந்தர் ராஜினாமா!

 கொந்தளிப்பில் டெல்லி பல்கலைக்கழகம்; துணை வேந்தர் ராஜினாமா!
கொந்தளிப்பில் டெல்லி பல்கலைக்கழகம்; துணை வேந்தர் ராஜினாமா!
 கொந்தளிப்பில் டெல்லி பல்கலைக்கழகம்; துணை வேந்தர் ராஜினாமா!

புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகம் 3 ஆண்டுகளுக்குப்பதிலாக 4 ஆண்டுகள் இளநிலை பட்டப்படிப்பை கொண்டுவந்துள்ளதற்கு மாணவர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இதற்கு காரணமான டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் தினேஷ் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

3 ஆண்டுக்குப்பதிலாக 4 ஆண்டு பட்டப்படிப்பு

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 60 கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில் இப்பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு திட்டத்தை, பல்வேறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினரின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே கொண்டுவந்தது. வழக்கமாக நாடு முழுவதும் இளநிலை பட்டப்படிப்பு என்பது 3 ஆண்டுகளாக இருக்க, டெல்லி பல்கலைக்கழகம் மட்டும் இவ்வாறு கூடுதலாக ஒரு ஆண்டை சேர்த்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

யுஜிசி-யின் தாமதமான எதிர்ப்பு

இந்நிலையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி கல்வியின் தரங்கள் மற்றும் கொள்கைகளை வகுத்து, அவற்றுக்கான நிதிகளையும் வழங்கி வரும் யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு ( University Grants Commission - UGC ), டெல்லி பல்கலைக்கழகம் 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என தற்பொழுது உத்தரவிட்டுள்ளது. 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு என்பது தேசிய அளவிலான கொள்கைக்கு மாறானது என்றும், இளநிலை பட்டப்படிப்புக்கு 3 ஆண்டுகளே போதுமானது என்றும் அது கூறியுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகம் பிடிவாதம்

ஆனால் யுஜிசி-யின் இந்த உத்தரவை ஏற்கமறுத்த டெல்லி பல்கலைக்கழகம், தாங்கள் தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகம் என்பதால், இந்த உத்தரவு தங்களது உரிமையில் தலையிடுவது ஆகும் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பை கடந்த ஆண்டே டெல்லி பல்கலைக்கழகம் கொண்டுவந்தபோது அப்போதே அதனை யுஜிசி எதிர்க்காதது ஏன்? என்றும் இன்னொரு தரப்பினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

 கொந்தளிப்பில் டெல்லி பல்கலைக்கழகம்; துணை வேந்தர் ராஜினாமா!

போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அதன் அதிகாரத்தின் கீழ் வரும் கல்லூரிகளில் முதலாமாண்டு பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் இன்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் மேற்கூறிய சர்ச்சை காரணமாக மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் உள்ளனர்.

இதனிடையே கடந்த ஆண்டு 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்த சுமார் 60,000 மாணவர்கள், தங்களது எதிர்காலம் என்னவாகும் என கலங்கிப்போயுள்ளனர். இந்நிலையில் 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் மாணவர்களும், ஆசிரியர்களும் தனித்தனியாக  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு

இதனிடையே இந்த விவகாரத்தில் தலையிடக்கோரி டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உச்ச

 கொந்தளிப்பில் டெல்லி பல்கலைக்கழகம்; துணை வேந்தர் ராஜினாமா!

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் அதில் தலையிட மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், மனுதாரரை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு இன்று அறிவுறுத்தியது.

மேலும் மத்திய அரசும் இவ்விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டது. இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இதைபற்றி பேச தனக்கு உரிமை இல்லை என்று கூறி எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். 

துணைவேந்தர் ராஜினாமா

இந்நிலையில் 4 ஆண்டு பட்டப்படிப்பை அறிமுகப்படுத்திய சர்ச்சைக்கு காரணமான டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் தினேஷ் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனிடையே தினேஷ் சிங்கின் ராஜினாமாவை தொடர்ந்து, புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.