Published:Updated:

புதுச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தர் விடுமுறையில் செல்ல உத்தரவு!

Vikatan Correspondent
புதுச்சேரி பல்கலைக்கழகத்  துணைவேந்தர் விடுமுறையில் செல்ல உத்தரவு!
புதுச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தர் விடுமுறையில் செல்ல உத்தரவு!
புதுச்சேரி பல்கலைக்கழகத்  துணைவேந்தர் விடுமுறையில் செல்ல உத்தரவு!

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்  துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை விடுமுறையில் செல்ல மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை  பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு, மாணவ மாணவிகள் முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கடந்த மாதம் (ஜூலை) 27 ஆம்  தேதி முதல்   இந்தப்  போராட்டம் நடந்து வருகிறது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் மீது 2 முறை போலீசார் தடியடி நடத்திய சம்பவமும் நடந்தது. அதைத் தொடர்ந்து இந்த பிரச்னை தீவிரம் அடைந்தது.போரட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுக்கு சமூக விரோதிகளால் பாலியல் தொல்லையும், கொலை மிரட்டல்களும்  கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி புதுச்சேரியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. 

நாளுக்கு நாள் போராட்டம் வலுவானதையடுத்து, மாணவ-மாணவிகள் போராட்டம் குறித்து விசாரணை நடத்த பல்கலைக்கழக மானியக்குழு இணை செயலாளர் கே.பி.சிங் மற்றும் உயர்கல்வித் துறை இயக்குனர் அமித் சுக்லா ஆகியோரைக் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்தது. அந்தக்  குழுவினர் புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ-மாணவிகள், பல்கலைக்கழக ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரிடம் 2 நாட்கள் விசாரணை நடத்திவிட்டு, டெல்லி சென்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை விடுமுறையில் செல்லும்படி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது பற்றி  புதுச்சேரி மாநில தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா கூறும்போது, “பல்கலைக் கழக துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி மீதான புகார்கள் குறித்து விசாரணை நிலுவையில் உள்ளதால், அவரை விடுமுறையில் செல்லும்படி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.