Published:Updated:

52 வயது தொழிலதிபர் நீட் தேர்வில் வெற்றி! - `ஏழை மாணவர்களுக்காகத் தேர்வெழுதினேன்’... ஏன் தெரியுமா?

நீட் தேர்வு

குஜராத்தைச் சேர்ந்த 52 வயதான தொழிலதிபர் ஒருவர் மிகக் கடினமான மருத்துவ நுழைவுத்தேர்வில் (NEET) வெற்றிபெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

52 வயது தொழிலதிபர் நீட் தேர்வில் வெற்றி! - `ஏழை மாணவர்களுக்காகத் தேர்வெழுதினேன்’... ஏன் தெரியுமா?

குஜராத்தைச் சேர்ந்த 52 வயதான தொழிலதிபர் ஒருவர் மிகக் கடினமான மருத்துவ நுழைவுத்தேர்வில் (NEET) வெற்றிபெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

Published:Updated:
நீட் தேர்வு

குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த 52 வயதான பிரதீப் குமார் சிங் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை எழுதியிருந்தார். நீட் தேர்வு முடிவுகள் கடந்த புதன்கிழமை இரவு ஆன்லைனில் வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வில் பிரதீப் குமார் சிங் 720 மதிப்பெண்களுக்கு 607 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

இந்தத் தேர்ச்சி குறித்து அவர், "மருத்துவப் படிப்பு தற்போது நீட் எழுதினால்தான் என்ற நிலை உருவாகிவிட்டது. நீட் பயிற்சிக்காக பயிற்சி நிறுவனங்கள் மிக அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அது ஏழை மாணவர்களுக்கு எட்டாதது. இதனால் பல ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவாகவே போய்விடுகிறது.

பிரதீப் குமார் சிங்
பிரதீப் குமார் சிங்
ட்விட்டர்

ஏழை மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி மையத்தைத் திறக்க விரும்பினேன். அதற்காக, மருத்துவம் படிக்க விரும்பும் ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில், நானும் நீட் தேர்வை எழுதினேன். இதில் தேர்ச்சி பெற்றதால் இனி ஏழை மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்க விரும்புகிறேன். எல்லிஸ்பிரிட்ஜிலுள்ள என்ஹெச்எல் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்துவரும் என் மகன் சினேகன்ஷ், எனது முயற்சிக்கு முழு ஆதரவை அளித்துவருகிறார். 2019 நீட் தேர்வில் கலந்துகொள்ள என் மகன் தயாரானபோது தான் எனக்கும் நீட் மீது ஆர்வம் வந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மருத்துவம்
மருத்துவம்

என் மகன் 595 மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் படித்துக்கொண்டிருக்கிறார் " எனத் தெரிவித்திருக்கிறார். பிரதீப் குமார் சிங் தனது 12-ம் வகுப்பை 71 சதவிகித மதிப்பெண்களுடன் 1987-ம் ஆண்டு டெல்லியில் முடித்தார். பின்னர், அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ (பொருளாதாரம்) முடித்தார், அதைத் தொடர்ந்து டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் வணிகப் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அவரது ஆரம்ப வாழ்க்கையில், வணிகப் பத்திரிகைகளில் பணியாற்றினார். அதன் பிறகு தொழில் தொடங்கி தொழிலதிபர் ஆகிவிட்டார்.