Published:Updated:

ஒரே நாளில் 2 போட்டித்தேர்வுகள்; குமுறலில் பட்டதாரிகள்

விகடன் விமர்சனக்குழு
ஒரே நாளில் 2 போட்டித்தேர்வுகள்; குமுறலில் பட்டதாரிகள்
ஒரே நாளில் 2 போட்டித்தேர்வுகள்; குமுறலில் பட்டதாரிகள்
ஒரே நாளில் 2 போட்டித்தேர்வுகள்; குமுறலில் பட்டதாரிகள்

ந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பரவலாக இருக்கிறது. இந்தநேரத்தில் ஒரே நாளில் 2 போட்டித்தேர்வுகளை அறிவிப்பு செய்து பட்டதாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது மத்திய அரசின் தபால்துறை.

ஒரு துறையின் கீழ் வரும் 2 பதவிகளுக்கு ஒரே நேரத்தில் நடத்த மத்திய அரசின் தபால்துறை திட்டமிட்டிருப்பது இந்த தேர்வில் பங்கேற்க காத்திருப்போரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வருகிற நவம்பர் 15 ந்தேதி ( ஞாயிற்றுக்கிழமை) மத்திய அரசின் ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் (S.S.C) போஸ்டல் அசிஸ்டெண்ட் தேர்வை நடத்துகிறது. அதே நாளில் போஸ்டல் டிபார்ட்மெண்ட்  'போஸ்ட்மேன்' பதவிக்கான தேர்தலை நடத்துகிறது.

படிப்பு தகுதியின் அடிப்படையில் 2 தேர்வுக்கும் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஆர்வமாக படித்துவந்தனர். ஆனால் 2 தேர்வுகளுக்கும் எழுத்துத்தேர்வு ஒரு நாளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டித்தேர்வுகள் குறைந்துவிட்ட சூழலில் அரசு வேலைக்காக இளைஞர்கள் மத்திய, மாநில அரசு நடத்தும் எல்லா தேர்வுகளையும் எழுதுகின்றனர். அந்த வகையில் ஒரே நேரத்தில் 2 தேர்வுகளை நடத்தும் மத்திய அரசின் குழப்பமான நடிவடிக்கையால் திறமையிருந்தும் தங்கள் வாய்ப்பு தட்டிப்பறிக்கப்படுவதாக குமுறுகின்றனர் பட்டதாரிகள்.

ஒன்றில் தோற்றால் மற்றொன்றில் பங்கேற்று வேலையை உறுதிப் படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் தட்டிப் பறிக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 2 தேர்வுகளிலும் பங்கேற்கும் வகையில் ஏதாவது ஒரு தேர்வை தள்ளி வைக்கலாமே என்கின்றனர் இந்த இரு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்திருக்கும் தேர்வர்கள்.

ஒரே நாளில் 2 போட்டித்தேர்வுகள்; குமுறலில் பட்டதாரிகள்

விழுப்புரத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர்.“ ஒரு நேரத்தில் 2 தேர்வுகளை நடத்துவதால் 2 தேர்வுகளில் ஒன்றைத்தான் நாங்க அட்டண்ட் செய்யமுடியும். மத்திய அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கா நீண்ட வருடம் படித்துக்கொண்டிருக்கும் என்னைப்போன்ற பலருக்கு பெரிய இழப்பு.

இப்படி ஒரு அறிவிப்பு வெளியானதும் சென்னையில் உள்ள தபால்துறை தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசினோம். நாங்க ஒன்றும் செய்ய முடியாது. இரண்டில் எதை எழுதுவது என நீங்கள்தான் முடிவுசெய்துகொள்ளவேண்டும் என்று பொறுப்பில்லாமல் பதிலளித்தனர்.

ஒரே நாளில் 2 போட்டித்தேர்வுகள்; குமுறலில் பட்டதாரிகள்

தயவுசெய்து மத்திய அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று இந்த தேர்வுகளை வெவ்வேறு நாட்களில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.

இந்த விவகாரம் குறித்து தபால் துறை தரப்பில் விசாரித்தால், ' ஒரே நேரத்தில் இரண்டு தேர்வுகளையும் நடத்துவது உண்மைதான்.

போஸ்டல் அசிஸ்டெண்ட் போஸ்ட், டிகிரி முடித்தவர்களுக்கானது. போஸ்ட் மேன் பதவி என்பது பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு.

தகுதியின் அடிப்படையில் ஒருவரே 2 தேர்வுகளையும் எழுதி  இன்னொரு நபரின் வாய்ப்பை தட்டிப்பறிப்பதை தடுக்கவே இப்படி செய்யப்பட்டுள்ளது' என்கின்றனர்.

எப்படியெல்லாம் சிந்திக்கிறாய்ங்க!

- ந.பா.சேதுராமன்