Published:Updated:

ஒடிசா: ``அன்று, எழுதமுடியாமல் போனது” - 44 ஆண்டுகளுக்குப் பின் 10-ம் வகுப்பு தேர்வெழுதிய எம்.எல்.ஏ!

ஒடிசா எம்எல்ஏ அங்கதா கன்ஹர்

ஒடிசாவில், 58 வயதாகும் எம்.எல்.ஏ ஒருவர் 40 வருடங்களுக்குப் பிறகு 10-ஆம் தேர்வெழுதி, கல்வி கற்க வயது ஒருபோதும் தடையே இல்லை என்பதை உணர்த்தி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

ஒடிசா: ``அன்று, எழுதமுடியாமல் போனது” - 44 ஆண்டுகளுக்குப் பின் 10-ம் வகுப்பு தேர்வெழுதிய எம்.எல்.ஏ!

ஒடிசாவில், 58 வயதாகும் எம்.எல்.ஏ ஒருவர் 40 வருடங்களுக்குப் பிறகு 10-ஆம் தேர்வெழுதி, கல்வி கற்க வயது ஒருபோதும் தடையே இல்லை என்பதை உணர்த்தி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

Published:Updated:
ஒடிசா எம்எல்ஏ அங்கதா கன்ஹர்

ஒடிசா மாநிலத்தில், பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ அங்கதா கன்ஹர், 44 வருடங்களுக்குப் பிறகு, 10-ஆம் வகுப்பு தேர்வெழுதி பலரையும் வியக்க வைத்துள்ளார். தான் பாதியில் விட்டுச்சென்ற 10-ஆம் வகுப்பு தேர்வை, தற்போது 58 வயதில் எழுதி, ``கல்வி கற்க வயது ஒருபோதும் தடையே இல்லை" என்பதை உணர்த்தியுள்ளார்.

ஒடிசாவில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதில், இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் மெட்ரிகுலேஷன் தேர்வுக்கு தயாரான கன்ஹர், ருஜாங்கி உயர்நிலைப் பள்ளியில், 10-ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வெழுதினார்.

40 வருடங்களுக்கு பின் 10-ம் வகுப்பு தேர்வெழுதிய எம்எல்ஏ
40 வருடங்களுக்கு பின் 10-ம் வகுப்பு தேர்வெழுதிய எம்எல்ஏ

தேர்வு அறைக்கு செல்லும் முன்னர் பேசிய கன்ஹர், ``நான் 1978-ல் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்போதிருந்த சில குடும்ப பிரச்னைகளின் காரணமாக என்னால் தேர்வு எழுதமுடியாமல் போனது. இப்போதெல்லாம், 50 வயது ஏன் அதற்கு மேற்பட்ட வயதில் கூட பலரும் தேர்வெழுதுகிறார்கள். அதனால், நானும் தற்போது தேர்வெழுதலாம் என்று முடிவு செய்தேன். இங்கு தேர்வு எழுதவோ, கல்வி கற்கவோ வயது ஒருபோதும் தடையே இல்லை" என கூறினார்.

இவருடன், கிராம தலைவர் என அழைக்கப்படும் `சர்பஞ்ச்' ஒருவர் நேற்று தேர்வெழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இத்தேர்வு குறித்து பேசிய பள்ளி தலைமை ஆசிரியை, ``சில காரணங்களால் பள்ளிப் படிப்பை தொடர முடியாமல், தேர்வெழுத முடியாமல் போனவர்களுக்கு, திறந்தநிலைப் பள்ளித் தேர்வுகள் நடத்துகிறோம். இத்தேர்வில் கன்ஹர் உட்பட 63 பேர் நேற்று தேர்வெழுதினர். இத்தேர்வானது, மே 10-க்குள் முடிந்துவிடும்" என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism