Published:Updated:

ஏழை மாணவர்கள் வெளிநாடுகளில் படிக்க புதிய திட்டம்

Vikatan Correspondent

சென்னை: வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் தகுதி வாய்ந்த ஏழை - எளிய மாணவர்களுக்கு உதவும் வகையில், செமஸ்டர் அப்ராட் (Semester Abroad) என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு மாநில உயர் கல்விக் கவுன்சில் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மாநில உயர் கல்விக் கவுன்சில் துணைத் தலைவராக சிந்தியா பாண்டியன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் 20 முதல் 30 சதவீதம் பேருக்கு, படிப்புக்கு ஏற்ற வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை.

மாணவர்களின் படிப்பிற்குத் தகுந்தவாறு வேலைவாய்ப்புகள் கிடைத்திட கவுன்சிலிங் மேற்கொள்ளப்படும்.

வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க நினைக்கும், தகுதி வாய்ந்த ஏழை - எளிய மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் செமஸ்டர் அப்ராட் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்," என்றார் சிந்தியா பாண்டியன்.