Published:Updated:

நீட் தேர்வு விவகாரம்: பிரகாஷ் ஜவடேகரைச் சந்தித்தனர் தமிழக அமைச்சர்கள்!

Vikatan Correspondent

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக் கோரி மத்திய அரசிடம் வலியுறுத்த, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும்  உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் டெல்லி சென்றனர்.

டெல்லி சென்ற அமைச்சர்கள், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், 'நீட் விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதியளித்தார். மேலும், நீட் தேர்வு  குறித்த தமிழக சட்டப்பேரவையின் சட்டத்துக்கு, குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளோம்' என்று கூறினார்