Published:Updated:

சட்டையை கிழித்துக்கொண்டு நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்கள்...!

சட்டையை கிழித்துக்கொண்டு நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்கள்...!
சட்டையை கிழித்துக்கொண்டு நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்கள்...!

நீட் தேர்வுக்கு சென்ற மாணவர்களுக்கு கடுமையான சோதனைகள் செய்யப்பட்டதால் தேர்வு எழுதச் சென்ற மாணவ மாணவிகள் கடுமையான இன்னலுக்கு ஆளாகினர். 

சட்டையை கிழித்துக்கொண்டு நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்கள்...!


மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று இந்தியா முழுவதும் 104 நகரங்களில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 88 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்விற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு சென்ற மாணவ, மாணவிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகினர்.

மாணவர்கள் முழுக்கை சட்டையுடன் தேர்வு எழுத அனுமதி கிடையாது என்று ஏற்கெனவே விதிமுறைகள் இருந்துள்ளது. இது தெரியாத நிறைய மாணவர்கள் முழுக்கை சட்டை அணிந்து தேர்வு எழுத வந்தனர். தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படாததால் அவர்கள் சட்டையின் கைப்பகுதியை வெட்டிவிட்டு தேர்வு எழுத சென்றனர். மேலும் மாணவிகள் கம்மல், ஹேர்பின், கொலுசு போன்றவற்றை அணிந்து கொண்டு தேர்வு எழுதுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் தேர்வு மையத்திற்கு முன் மாணவிகள் தாங்கள் அணிந்திருந்த கொலுசுகள், வளையல்கள், கம்மல்களை  தங்களது பெற்றோர்களிடம் கழட்டி கொடுத்து விட்டு சென்றனர். மேலும் தேர்வு எழுதுவதற்கு ஒரு பாஸ்போட் சைஸ் போட்டோவும், போஸ்ட் கார்டு சைஸ் போட்டோ தவிர இரண்டு போட்டோக்கள் தேவைப்பட்டுள்ளது. தேவையான போட்டோக்கள் இல்லாத சிலர் போட்டோ எடுப்பதற்கு அலைந்து திரிந்து சிரமப்பட்டுள்ளனர்.