Published:Updated:

அரசு மருத்துவமனையில் அ.தி.மு.க அம்மா அணி எம்.பி நவநீதகிருஷ்ணன் அனுமதி

குருபிரசாத்
அரசு மருத்துவமனையில் அ.தி.மு.க அம்மா அணி எம்.பி நவநீதகிருஷ்ணன் அனுமதி
அரசு மருத்துவமனையில் அ.தி.மு.க அம்மா அணி எம்.பி நவநீதகிருஷ்ணன் அனுமதி

அ.தி.மு.க அம்மா அணியைச் சேர்ந்தவரும், மாநிலங்களவை உறுப்பினருமானவர் நவநீதகிருஷ்ணன். இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், நேற்று மாலை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசு மருத்துவமனையில் அ.தி.மு.க அம்மா அணி எம்.பி நவநீதகிருஷ்ணன் அனுமதி


இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், "நவநீதகிருஷ்ணணுக்கு நுரையீரலில் அதிக சளிப் பிடித்துவிட்டது. இதனால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சர்க்கரை நோயும் இருப்பதால் உடல்நலக்குறைபாடு ஏற்பட்டது. அவர் ஏற்கெனவே டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, நலமாக உள்ளார். நார்மல் வார்டில்தான் உள்ளார். இன்னும் ஒரு சில தினங்களில், டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் " என்றனர்.