Published:Updated:

மருத்துவக் கல்வித் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்: மன்மோகன்

மருத்துவக் கல்வித் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்: மன்மோகன்
மருத்துவக் கல்வித் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்: மன்மோகன்
மருத்துவக் கல்வித் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்: மன்மோகன்

புதுச்சேரி:  நாட்டின் விரிவான மருத்துவ தேவையை நிறைவு செய்யும் வகையில்  மருத்துவக் கல்வித் திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்  சிங் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி பட்டமேற்படிப்பிற்கான ஜவஹர்லால்  கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று இன்று சிறப்புரையாற்றுகையில்  இவ்வாறு கூறிய அவர்,இந்த புதிய கல்வித்திட்டம் மருத்துவர்கள் தொழில்நுட்ப ரீதியில்  திறமை பெற்றவர்களாகவும்,சமூக பிரச்னைகளை உணர்ந்தவர்களாகவும்,அறநெறியுடன்  செயல்படுபவர்களாக இருக்க பயிற்சி அளிக்கக்கூடியதாக அமைய வேண்டும் என்றார்.

”மருத்துவ கல்வியை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை  எடுத்துள்ளது.மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புக்கான இடங்களின்  எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்வியின் தரத்தில் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும். இதன் தரம்  குறைந்து வருவதாக உணரப்பட்டுள்ளது.இந்த நிலைமை தொடர நாம் அனுமதிக்க  முடியாது.நமது மருத்துவக்கல்வியின் தரத்தை மேம்படுத்த அமைப்பு ரீதியிலான  சிறப்பான ஒழுங்குமுறை கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.

மருத்துவக்கல்வி பாடத்திட்டத்திலும் நாம் முக்கிய கவனம் செலுத்தவேண்டியது  அவசியமாகும்.மருத்துவர்களின் அணுகுமுறை குறுகிய தொழில்நுட்ப அடிப்படையில்  மட்டும் அமையாமல் உடல் நலத்தைப்பேணும் பணியை ஒட்டுமொத்தமாக கவனிக்கும்  வகையில் பயிற்சி இருக்கவேண்டும்.

மருத்துவ பயிற்சி பெறும் மாணவர்கள் உள்ளூர் சமூகத்தினருடனும், கிராமப்புறங்களிலும்  பணியாற்ற தயாராக இருக்கவேண்டும். உடல் நலம் சம்மந்தப்பட்ட சமூக காரணிகளை  மருத்துவர்கள் அறிந்திருப்பதுடன், தற்காப்பு உடல் நலப்பணிகளிலும்,  மேலாண்மையிலும் அவர்கள் பங்கேற்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

21-ம் நூற்றாணடில் அறிவியலும், சமுதாயமும் விரைவாக வளர்ச்சிபெற்று  வருவதற்கேற்ப, மருத்துவ பணியாளர்களின் சிந்தனையும், செயல்பாடும் இருக்க  வேண்டும். இந்திய மருத்துவ சபையும், மருத்துவ பட்ட படிப்பிற்கான பாட திட்டத்தை  மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. சமுதாய மருத்துவ  பயிற்சியையும் இதில் சேர்ப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது” என்று  அவர் மேலும் கூறினார்.