Published:Updated:

அண்ணா பல்கலை துணைவேந்தர் தேர்வு; ஆர்.எம்.லோதா தலைமையில் கமிட்டி

MUTHUKRISHNAN S
அண்ணா பல்கலை துணைவேந்தர் தேர்வு; ஆர்.எம்.லோதா தலைமையில் கமிட்டி
அண்ணா பல்கலை துணைவேந்தர் தேர்வு; ஆர்.எம்.லோதா தலைமையில் கமிட்டி

சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக் கழகங்களுக்கும் துணைவேந்தர்கள் பதவி காலியாக இருந்தது. அதற்கு துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு கமிட்டி அமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள், ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் 3 பேரை பரிந்துரை செய்தனர். அவர்களில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.


இந்நிலையில், தேர்வு கமிட்டி பரிந்துரை செய்தவர்களை நேர்காணல் செய்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை, சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தராக துரைசாமி ஆகியோரை ஆளுநர் நியமனம் செய்தார். இருவரும் இன்று மே 27 ஆம் தேதி பதவியேற்றனர். ஆனால், அண்ணா பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தர் நியமனத்துக்கு பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களை ஆளுநர் நிராகரித்து விட்டார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் புதிய குழு அமைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறுகையில், ''பல லட்சம் மாணவர்கள் நலனை முன்னிட்டு இன்னும் தகுதியானவரை நியமிக்க ஆளுநர் முடிவு செய்துள்ளார். அதற்கான வேலைகளை தொடங்கி விட்டோம்" என்றார்.