Published:Updated:

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிரான வழக்கு: ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவு! 

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிரான வழக்கு: ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவு! 
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிரான வழக்கு: ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவு! 

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிரான வழக்கு: ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவு! 

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிரான வழக்கில் துணைவேந்தர் செல்லத்துரை ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தருக்கு, தொடர் எதிர்ப்பலைகள் எழுந்தவண்ணம் உள்ளன. வந்த முதல் நாளிலேயே, துணைவேந்தர் செல்லத்துரை நியமனத்துக்குப் பல்கலைக்கழக வட்டாரத்தினர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, செல்லத்துரையின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பல்கலைக்கழகப் பதிவாளர் தனது பதவியை ராஜினாமாசெய்தார். அதைத்தொடர்ந்து, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சிலரும் தொடர்ச்சியாகத் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, பல்கலைக்கழகத்தினுள் முறைகேடுகள் அதிகம் நடப்பதாகவும், துணைவேந்தர் மீது அதிகக் குற்றச்சாட்டுகள் பதிவாகின்றன என்றும் அதிகளவில் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் வி.சி. செல்லத்துரை கூறுகையில், ‘என் வளர்ச்சி பிடிக்காத சிலர்தான் ஆதாரங்கள் ஏதுமின்றி குற்றம் சுமத்தி வருகின்றனர்’ என்றார்.

இந்நிலையில், துணைவேந்தர் நியமனம்  தொடர்பாக  துணை வேந்தருக்கு எதிராக மனு அளிக்கப்பட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தது . மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், ‘துணைவேந்தர் புதிதாகப் பணியிடங்களை நிரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும். அவரைத் துணைவேந்தராக நியமனம் செய்ததை ரத்து செய்ய வேண்டும்"எனக் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் கொண்ட அமர்வு செல்லத்துரையைக் காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்தது தொடர்பான ஆவணங்களை ஆளுநரின் செயலர் மூடப்பட்ட கவரில் சீல் செய்து தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், பல்கலைக்கழக துணைவேந்தரின் செயலருக்கும், பதிவாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பிரச்னைக்கு மேல் பிரச்னை எழுவதால் மாணவர்களும், பெற்றோர்களும் அச்சத்தில் உள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு