Published:Updated:

’நீட்’ தேர்வு விவகாரம்... உச்சகட்ட குழப்பத்தில் புதுச்சேரி அரசு

’நீட்’ தேர்வு விவகாரம்... உச்சகட்ட குழப்பத்தில் புதுச்சேரி அரசு
’நீட்’ தேர்வு விவகாரம்... உச்சகட்ட குழப்பத்தில் புதுச்சேரி அரசு

’நீட்’ தேர்வு விவகாரம்... உச்சகட்ட குழப்பத்தில் புதுச்சேரி அரசு

ஒருவேளை  தமிழகத்தைப்போல் இந்த வருடம் புதுச்சேரிக்கும் ’நீட்’ தேர்லிருந்து விலக்கு கிடைக்குமானால் ஏற்கெனவே கலந்தாய்வு நடத்தி சேர்க்கப்பட்ட மாணவர்களின் நிலைமை கேள்விக்குறியாகும். இந்தக் குழப்பங்களுக்கு இடையில்தான் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் முதல்வர் நாராயணசாமி.

தமிழக அரசு தொடர்ச்சியான முயற்சி மேற்கொண்டதன்பேரின் ’நீட்’ தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பைத் தொடர்ந்து அவசர சட்டத்தை இயற்றுவது குறித்து ஆலோசனை செய்து வருகிறது தமிழக அரசு. அதன் எதிரொலியாக புதுச்சேரியில் இன்று நடைபெறுவதாக இருந்த தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு, இரண்டாவது முறையாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில் ’நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது புதுச்சேரி அரசு. மத்திய அரசு அதற்கு அனுமதி அளிக்காத நிலையில் சென்டாக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களை நிரப்பியது புதுச்சேரி அரசு. இந்நிலையில், இன்று தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்தது. தமிழகத்துக்கு ’நீட்’ தேர்வு விலக்கு குறித்த விவகாரத்தால் இன்று நடைபெறுவதாக இருந்த மருத்துவ கலந்தாய்வை தேதி குறிப்பிடாமல் இரண்டாவது முறையாக ஒத்தி வைத்திருக்கிறது புதுச்சேரி அரசு.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை அவசரமாகக் கூட்டியிருக்கிறார் முதல்வர் நாராயணசாமி. தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்டக் கட்சிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் புறக்கணித்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை தமிழக அரசு நடத்தவில்லை. ஆனால் புதுச்சேரியில் அவசர அவசரமாக முதல் கட்டக் கலந்தாய்வு நடத்தப்பட்டு அரசு ஒதுக்கீடு மருத்துவ இடங்களை நிரப்பிவிட்டது அரசு. ஒருவேளை ’நீட்’ தேர்வுக்கு இந்த வருடம் புதுச்சேரிக்கும் விலக்கு கிடைக்குமானால் ஏற்கெனவே கலந்தாய்வு நடத்தி சேர்க்கப்பட்ட மாணவர்களின் நிலைமை கேள்விக்குறியாகும். இந்தக் குழப்பங்களுக்கு இடையில்தான் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் முதல்வர் நாராயணசாமி.

அடுத்த கட்டுரைக்கு