Published:Updated:

"விலங்குகள் பற்றிப் பேசுகிறது; மதச்சார்பின்மை என்பதே இல்லை!" - கல்விக்கொள்கை குறித்து பேராசிரியர்கள்

புதிய கல்விக் கொள்கை விவாதக் கூட்டம்

484 பக்கங்களில், விலங்குகளைப் பற்றிய அறிவியல் பாடம்கூடப் பேசப்படுகிறது. ஆனால், மதச் சார்பின்மை பற்றிப் புதிய கல்விக்கொள்கையில் ஒரு சொல்கூட இல்லை.

"விலங்குகள் பற்றிப் பேசுகிறது; மதச்சார்பின்மை என்பதே இல்லை!" - கல்விக்கொள்கை குறித்து பேராசிரியர்கள்

484 பக்கங்களில், விலங்குகளைப் பற்றிய அறிவியல் பாடம்கூடப் பேசப்படுகிறது. ஆனால், மதச் சார்பின்மை பற்றிப் புதிய கல்விக்கொள்கையில் ஒரு சொல்கூட இல்லை.

Published:Updated:
புதிய கல்விக் கொள்கை விவாதக் கூட்டம்

அகில இந்தியக் கல்விப் பாதுக்காப்பு கமிட்டி (AISEC) மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொது நிர்வாகத் துறை, வரைவு தேசியக் கல்விக்கொள்கைப் பற்றிய கருத்தரங்கை ஜூலை 25-ம் தேதி சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடத்தின. இதில் மாணவர்களும் கல்வியாளர்களும் பங்கேற்றனர்.

புதிய கல்விக் கொள்கை விவாதக் கூட்டம்
புதிய கல்விக் கொள்கை விவாதக் கூட்டம்

பேரா.சிவகுமார், பேரா.கருணானந்தன், பேரா.மணிவண்ணன், பேரா.முரளி, பேரா.காந்திராஜ், பேரா.அருள் அறம், கமிட்டியின் கேரளப் பிரிவுத் தலைவர் ஆகியோர் உரையாற்றினார்கள். கல்விக்கொள்கையின் சாதக பாதகங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. அவர்கள் முன்வைத்த சில கருத்துகள் கீழ்வருமாறு...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"புதிய கல்விக்கொள்கை, கல்வியை ஒரு வியாபாரப் பண்டமாக மாற்றும். உலக வர்த்தக அமைப்புடனான ஒப்பந்தம், கல்வியை ஒரு வணிகப்பொருளாக மாற்றியுள்ளது. கல்வியை உலகமயமாக்குதலும், கல்வியை வியாபாரமாக்குதலுமே இந்தப் புதிய கல்விக்கொள்கையின் நோக்கங்களாக உள்ளன.

கார்ப்பரேட்டுகள் ஆளும் கல்வித்துறை எவ்வாறு சேவை மனப்பான்மையோடு நடக்கும்?

கல்விக்காக உருவாக்கப்பட்ட அனைத்துக் குழுக்களிலும் பெருநிறுவனங்களைச் சேர்ந்தவர்களே முக்கியப் பதவிகளை வகிக்கின்றனர். கார்ப்பரேட்டுகள் ஆளும் கல்வித்துறை எவ்வாறு சேவை மனப்பான்மையோடு நடக்கும்? 484 பக்கங்களில், விலங்குகளைப் பற்றிய அறிவியல் பாடம்கூடப் பேசப்படுகிறது; ஆனால், மதச் சார்பின்மை' பற்றிப் புதிய கல்விக்கொள்கையில் ஒரு சொல்கூட இல்லை".

"சுதந்திர இந்தியாவில் பல கல்விக்கொள்கைகள் வடிவமைக்கப்பட்டன. அவை அனைத்துமே தாய்மொழிக் கல்விக்கே முக்கியத்துவம் கொடுத்தன. ஆனால், இந்தப் புதிய கல்விக்கொள்கையோ, பிஞ்சுக்குழந்தைகளின் மீது மூன்று மொழிகளைத் திணிக்கிறது. மத்திய அரசின் நோக்கம், இந்தாண்டு பட்ஜெட்டிலேயே வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் `திணிக்க' 50 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது”.

484 பக்கங்களில், விலங்குகளைப் பற்றிய அறிவியல் பாடம்கூடப் பேசப்படுகிறது. ஆனால், `மதச்சார்பின்மை' பற்றிப் புதிய கல்விக்கொள்கையில் ஒருசொல்கூட இல்லை.
புதிய கல்விக் கொள்கை விவாதக் கூட்டம்
புதிய கல்விக் கொள்கை விவாதக் கூட்டம்

"சம்ஸ்கிருதத்தைப் புகட்டுவதன்மூலம் மதவாதத்தை இளம் மனதில் அரசு விதைக்க நினைக்கிறது. சர்வாதிகாரி ஹிட்லரும் உயிரியல், வரலாறு போன்ற பாடங்களின் மூலம்தான் மாணவர்களின் மனதில் யூதர்களை எதிரிகளாகவும், தாழ்வாகவும் சித்திரிக்கவைத்தார். அதே வித்தையைப் பயன்படுத்தி, மத்திய அரசும் மக்களிடையே பிரிவினையை உண்டாக்க நினைக்கிறது.”

"பள்ளிக் கல்வியை செமஸ்டர் முறையில் நடத்துவது இடைநிற்றலையே அதிகரிக்கும். பலதரப்பட்ட (multi disciplinary) பாடத்திட்டத்தின்மூலம் மாணவர்கள் நிபுணத்துவம் பெறமாட்டார்கள். இது, அவர்களை வேலைக்கு எவ்விதத்திலும் தயார்படுத்தாது. படிக்க மட்டும் சொல்லாமல், இத்திட்டம் மாணவர்களை ஆடவும் பாடவும் சொல்கிறது”.

"கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து ஒன்றியப் பட்டியலுக்கு மாற்றுவது, மாநில அரசிடமிருக்கும் குறைவான அதிகாரத்தையும் பறித்துக்கொள்ளும். சர்வமும் டெல்லிமயமாகும். கல்வித்துறை மொத்தமும் பிரதமரின் கைகளுக்கே சென்றுவிடும். 484 பக்கங்களில், விலங்குகளைப் பற்றிய அறிவியல் பாடம்கூடப் பேசப்படுகிறது. ஆனால், `மதச் சார்பின்மை' பற்றிப் புதிய கல்விக்கொள்கையில் ஒரு சொல்கூட இல்லை".

"இடஒதுக்கீடு குறித்து ஒருவரிகூடப் பேசப்படவில்லை. பள்ளிக்கல்வி மட்டுமல்ல, இந்த வரைவுக்கொள்கை கல்லூரிகளைக்கூட விட்டுவைப்பதில்லை. இல்லாத ஒரு ஜியோ கல்வி நிறுவனத்துக்கு, `சிறந்த கல்வி நிறுவனம்' என்ற பட்டம் வழங்குவது; கல்லூரிகள் தன்னாட்சியாக இயங்க அனுமதி வழங்குவது; கட்டணத்தைக் கல்வி நிறுவனங்களே நிர்ணயிப்பது போன்றவை கல்வியை ஏழைகளுக்கு எட்டாக்கனியாகத்தான் மாற்றும்.”

புதிய கல்விக் கொள்கை விவாதக் கூட்டம்
புதிய கல்விக் கொள்கை விவாதக் கூட்டம்

"புதிய கல்விக் கொள்கை ஊழலையே அதிகரிக்கும். தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை (NAAC)யின் அங்கீகாரம் பெறுவதுமுதல் துணைவேந்தர்களை நியமிப்பதுவரை அனைத்து இடங்களிலும் ஊழல் ஊறிவிடும்”.

"அனைவருக்கும் சமூக நீதி, அதிகமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிறுவுதல், மாநிலப் பட்டியலில் கல்வியைக் கொண்டுவருதல், சமூக-பொருளாதாரச் சமத்துவத்தை புகட்டும் கல்வித்திட்டம்... இக்கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கல்விக்கொள்கையே சிறந்தது.''

"மக்களின் ஒரே ஆயுதம் குரல்கொடுப்பது மட்டுமே. மக்கள் குரல் கொடுக்கவில்லை என்றால், எதிர்காலமே சூனியமாகிவிடும். `அர்பன் நக்சல்ஸ்' என்ற பட்டம் தந்தாலும், வருங்காலத் தலைமுறைகளுக்காகக் குரல்கொடுப்பது கல்வியாளர்களான எங்களது கடமை!” என்று அவர்கள் கூறினர்.