Published:Updated:

பொறியியல், மேலாண்மை கல்வி நிறுவனங்களில் கட்டணம் உயர்வு; AICTE நிர்ணய பட்டியல் என்ன?

college students (representational image)

டிப்ளோமா படிப்புகளுக்கு, குறைந்தபட்ச கட்டணம் ஆண்டுக்கு 67,900 ரூபாய்; அதிகபட்ச கட்டணம் ஆண்டுக்கு 1,64,700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளங்கலைப் படிப்புகளுக்கு, குறைந்தபட்ச கட்டணமாக 79,600 ரூபாயும், அதிகபட்ச கட்டணமாக 1,89,800 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொறியியல், மேலாண்மை கல்வி நிறுவனங்களில் கட்டணம் உயர்வு; AICTE நிர்ணய பட்டியல் என்ன?

டிப்ளோமா படிப்புகளுக்கு, குறைந்தபட்ச கட்டணம் ஆண்டுக்கு 67,900 ரூபாய்; அதிகபட்ச கட்டணம் ஆண்டுக்கு 1,64,700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளங்கலைப் படிப்புகளுக்கு, குறைந்தபட்ச கட்டணமாக 79,600 ரூபாயும், அதிகபட்ச கட்டணமாக 1,89,800 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
college students (representational image)

நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் பொறியியல், மேலாண்மைப் படிப்புகளுக்கு மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்விக் கட்டண தொகையை நிர்ணயித்துள்ளது, இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (All India Council for Technical Education - AICTE).

 ஏஐசிடிஇ
ஏஐசிடிஇ

தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என் ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான குழு ஒன்று நியமிக்கப்பட்டது. ஆறு வருடங்களுக்குப் பிறகு, கட்டணம் குறித்த மறுவரையறையை இக்குழு பரிந்துரைத்த நிலையில், தற்போது தேசிய கட்டணக் குழு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டண வரம்பை நிர்ணயித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன் அடிப்படையில் டிப்ளோமா படிப்புகளுக்கு, குறைந்தபட்ச கட்டணம் ஆண்டுக்கு 67,900 ரூபாய், அதிகபட்ச கட்டணம் ஆண்டுக்கு 1,64,700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளங்கலைப் படிப்புகளுக்கு, குறைந்தபட்ச கட்டணமாக 79,600 ரூபாயும், அதிகபட்ச கட்டணமாக 1,89,800 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதுகலை படிப்புகளுக்கு ஆண்டுக்கு 1,41,200 ரூபாய் முதல் 3,04,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலாண்மை படிப்புகளுக்கு, ஆண்டுக்கு 85,000 ரூபாய் முதல் 1,95,200 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

Money (Representational Image)
Money (Representational Image)

அடுத்து வரவிருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்தக் கட்டண முறை நடைமுறையில் இருக்கும். பரிந்துரைக்கப்பட்ட இந்தக் கட்டணமானது, தற்போது கல்வியாண்டில் சேரும் மாணவர்களுக்கு பொருந்துவதோடு, ஆண்டுதோறும் கட்டணத்தில் 5 சதவிகிதம் வரை உயரும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"குழு தற்போது நிர்ணயித்த கட்டணம் குறித்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளும்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழில்நுட்பக் கல்வியின் அனைத்து முதன்மைச் செயலாளர்கள் மற்றும் அவர்களின் கட்டண ஒழுங்குமுறைக் குழுக்களுக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம்'' என ஏஐசிடிஇ -யின் தலைவர் அனில் தத்தாத்ராய சஹஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism