Published:Updated:

கொரோனா: `1 முதல் 8-ம் வகுப்பு வரை தேர்வே இல்லாமல் தேர்ச்சி!' - உ.பி கல்வித்துறை

உத்தரப்பிரதேச கல்வித்துறை
உத்தரப்பிரதேச கல்வித்துறை

மார்ச் 23 முதல் தேதி முதல் 28 வரை தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது சர்வதேச பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலகளவில் கொரோனா தாக்கத்தால் இதுவரை 7,991 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,98,0000-க்கும் அதிகமானவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப்பிரதேச கல்வித்துறை
உத்தரப்பிரதேச கல்வித்துறை

இதில், இந்தியாவில் மட்டும் 148 பேருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியாகி உள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக, உலகளவில் 363 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை' என்று ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் கவலை தெரிவித்திருந்தது. மாணவர்களுக்கு ஏற்படும் கல்வி பாதிப்பைத் தடுக்க அவசரகால நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த நோய் தாக்கத்தின் அறிகுறியாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மத்திய அரசும், அந்த அந்த மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன.

பள்ளிக்கு போகாத குழந்தைகள்
பள்ளிக்கு போகாத குழந்தைகள்

அதில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. அதோடு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் பள்ளிகளுக்கு அந்த மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகள் வரை படிக்கும் அனைத்து மாணவர்களையும் தேர்வே இல்லாமல் தேர்ச்சி செய்யும்படி அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு