Published:Updated:

டிஜிட்டல் தலையங்கம்: வேண்டாம் கான்ட்ராக்ட் ஆசிரியர்கள்!

டிஜிட்டல் தலையங்கம்: வேண்டாம் கான்ட்ராக்ட் ஆசிரியர்கள்!

அரசின் முடிவை எதிர்த்து, ராணிப்பேட்டையச் சேர்ந்த ரவி என்பவர் தொடர்ந்த வழக்கில், 'தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்' என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

டிஜிட்டல் தலையங்கம்: வேண்டாம் கான்ட்ராக்ட் ஆசிரியர்கள்!

அரசின் முடிவை எதிர்த்து, ராணிப்பேட்டையச் சேர்ந்த ரவி என்பவர் தொடர்ந்த வழக்கில், 'தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்' என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Published:Updated:
டிஜிட்டல் தலையங்கம்: வேண்டாம் கான்ட்ராக்ட் ஆசிரியர்கள்!

ஆசிரியர் பணியென்பது பிற வேலைகளைப் போல கூலிக்குப் பார்க்கும் வேலையல்ல. அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற அறப்பணி. தன் மாணவர்களை தோளேற்றி மேலே மேலே அனுப்பிவிட்டு அவர்களின் வளர்ச்சியில் பெருமிதப்படுகிற அர்ப்பணிப்பு மிக்க பணி அது. உலகத்தைப் புரிந்துகொள்ளும் அறிவை மட்டுமின்றி, நல்லொழுக்கத்தையும் பண்புகளையும் ஊட்டி வளர்ப்பவர்கள் ஆசிரியர்கள். அதனால்தான் ஆசிரியர்களை இந்த சமூகம் தெய்வத்துக்கும் முன்பாக வைத்து மதிக்கிறது.

ஆசிரியர்கள் போராட்டம்
ஆசிரியர்கள் போராட்டம்
File Photo

இத்தகைய பொறுப்புமிக்க ஆசிரியர்களை அரசுகள் கையாளும் முறை மிகவும் வருத்தமளிக்கிறது. ஆசிரியர் தகுதித்தேர்வுகளை எழுதி தேர்ச்சிபெற்று உரிய தகுதிகளோடு ஒரு லட்சம் ஆசிரியர்கள் பணிக்காக காத்திருக்கும் நேரத்தில், அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 13,311 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமிக்கத் திட்டமிட்டிருக்கிறது தமிழக பள்ளிக்கல்வித்துறை. ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதாதவர்கள், இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தில் பணியாற்றும் பட்டதாரிகள் போன்றோரும் ஆசிரியர்களாகும் வாய்ப்பை இது ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசின் முடிவை எதிர்த்து, ராணிப்பேட்டையச் சேர்ந்த ரவி என்பவர் தொடர்ந்த வழக்கில், `தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்' என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டு மாதங்களில் ஒரு தேர்தலையே நடத்தி முடித்துவிடுகிறது தேர்தல் ஆணையம். தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புப்பணிகள் முடிந்து 8 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் பணிக்காகக் காத்திருக்கும் சூழலில், அவர்களுக்கு நியமனம் தருவதற்கான முன்னெடுப்புகளைச் செய்யாமல், பொறுப்பைத் தட்டிக் கழித்து பள்ளி மேலாண்மைக்குழுக்களின் தலையில் சுமத்தியிருக்கிறது தமிழக அரசு.

ஆசிரியர்கள் போராட்டம் (File Photo)
ஆசிரியர்கள் போராட்டம் (File Photo)
எஸ்.தேவராஜன்

கொரோனா காலக்கட்டத்தில் கற்றல் வாய்ப்பே இல்லாமல் பல ஆயிரம் பேர் குழந்தைத் தொழிலாளர்களாகிவிட்டார்கள். பலர் கடும் துயரங்களைக் கடந்து மீண்டும் பள்ளிக்கு வந்திருக்கிறார்கள். அவர்களைத் தக்கவைக்க போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய தமிழக அரசு, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க நினைப்பது அரசுப்பள்ளியை நம்பிவரும் குழந்தைகளுக்குச் செய்யும் அநீதி. கடந்த இரண்டாண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசுப்பள்ளிகளுக்கு புதிதாக வந்திருக்கிறார்கள். அவர்களுக்காக உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.

இந்திய அரசியல் சாசனப் பிரிவின் ஆறு அடிப்படை உரிமைகளில் ஒன்று கல்வி உரிமை. கட்டாயக் கல்வி உரிமைச்சட்டமும் கல்வியை அடிப்படை உரிமையாக்குகிறது. தகுதிவாய்ந்த, நிரந்தர ஆசிரியர்களை பள்ளிகளில் நியமிக்காததும் குழந்தைகளின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயல்தான். அரசு பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்!