Published:Updated:

குஜராத்தில் மூடப்படும் தமிழ்ப் பள்ளி! - சட்ட விதிகளை மேற்கோள் காட்டிய ஆ.ராசா

 நீலகிரி நடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா.
நீலகிரி நடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் செயல்பட்டுவந்த தமிழ்வழிப் பள்ளியை மூட முடிவெடுத்திருக்கும் அரசின் திட்டத்தைக் கைவிடக்கோரி பிரதமருக்கு, நீலகிரி எம்.பி ஆ.ராசா கடிதம் எழுதியிருக்கிறார்.

குஜராத் மாநிலம், அகமதாபாத்திலுள்ள மணி நகரில் கடந்த 1971-ம் ஆண்டு தமிழ் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. தற்போது கொரோனா மற்றும் மாணவர்கள் எண்ணிக்கையைக் காரணம் காட்டி, அந்தப் பள்ளியை மூடுவதாக அந்த மாநில அரசு அறிவித்திருக்கிறது.

குஜராத் தமிழ்ப் பள்ளி
குஜராத் தமிழ்ப் பள்ளி
Karthikeyan K

குஜராத் அரசின் இந்த முடிவால் அங்கு வாழ்ந்துவரும் தமிழர்களும், தமிழ்வழியில் கல்வி பயின்றுவரும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

குஜராத் அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து, அங்கு வாழும் தமிழ் மக்கள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டதைக் கைவிடக்கோரி நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினரும், மக்களவை தி.மு.க கொறடாவுமான ஆ.ராசா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

குஜராத் தமிழ்ப் பள்ளி
குஜராத் தமிழ்ப் பள்ளி
Karthikeyan K

அந்தக் கடிதத்தில், `குஜராத் அரசின் இந்த முடிவு, இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்ட விதிமுறைகளை மீறுவதாகும். அரசியலமைப்பு 350 ஏ பிாிவு, `மொழிச் சிறுபான்மையினரின் குழந்தைகளுக்குத் தாய்மொழியில் கற்பிப்பதற்கு ஒவ்வொரு மாநிலமும் போதுமான வசதிகளை வழங்க வேண்டும்’ என தெரிவிக்கிறது.

`அகமதாபாத் தமிழ்ப் பள்ளியை மூட முடிவு செய்த குஜராத் அரசு!' - பின்னணி என்ன?

பிரதமர் யு.என்.ஜி.ஏ உரையில் புகழ்பெற்ற புலவர் கணியன் பூங்குன்றனாரின் கருத்துகளையும், திருக்குறளையும் மேற்கொள்காட்டிப் பேசினார். எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, குஜராத்தில் தமிழ்வழிப் பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து செயல்படவும், குஜராத் அகமதாபாத்திலுள்ள புலம்பெயர் தமிழகத் தொழிலாளர்கள் மற்றும் ஜவுளித் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும்’ என மேலும் சில சட்டப்பிரிவுகளை மேற்கோள்காட்டி குறிப்பிட்டிருக்கிறார், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா.

அடுத்த கட்டுரைக்கு