Published:Updated:

`லாக்டௌன் தளர்வு... பள்ளிக்கூடங்கள் திறப்பு...' - பிள்ளைகளை அனுப்பத் தயாரா? #VikatanSurvey

school  reopening
school reopening ( Representational Image )

சென்னை உட்பட பல ஊர்களிலும் கொரோனா சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என்று பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், உலகின் 186 நாடுகளில் 130 கோடி மாணவர்களின் கல்வி, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது என்ற புள்ளிவிவரத்தையும் புறம் தள்ளுவதற்கில்லை.

ஊரடங்கு தளர்வது, நார்மல் வாழ்க்கைக்குச் செல்வது என்று உலகின் பல நாடுகளில் சூழ்நிலை இயல்புநிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. நம் நாட்டிலும் கொரோனாவுடன் வாழப் பழகுவதற்கான வழிகள் குறித்து தீவிரமாக பேசிக்கொண்டிருக்கிறோம். அரசின் அத்தியாவசியமான துறைகள் இயங்க ஆரம்பித்துவிட்டன. பத்தாம் வகுப்பு தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. கூடவே, பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்த அரசின் அறிவிப்புகளும் மாறி மாறி வந்துகொண்டிருக்கின்றன. 1 முதல் 5-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு செப்டம்பரிலும், 6 முதல் 12- ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஆகஸ்ட்டிலும் பள்ளிகள் திறக்கப்படும் என்கிறார்கள். பிறகு, அது வதந்தி என்கிறார்கள். தனியார் பள்ளிகள் ஜூன் ஒன்று முதல் ஆன்லைன் வகுப்புகள். நடத்தத் திட்டமிட, கல்வி அமைச்சர் அது கூடாது என எச்சரித்தார். ஆனால், மத்திய அரசு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதியளித்தி ருப்பதால், இங்கும் ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடைபோட முடியாது என்றார் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.

பள்ளிக்கூடம்
பள்ளிக்கூடம்

தவிர, பள்ளிக்கூடங்களை ஷிஃப்ட் முறையில் நடத்துவது, ஏ, பி, சி, டி செக்‌ஷன்களுக்கு திங்கள்கிழமை. மற்ற செக்‌ஷன்களுக்கு செவ்வாய்க்கிழமை. மறுபடியும் ஏ,பி,சி,டி செக்‌ஷன்களுக்கு புதன்கிழமை என்று வகுப்புகள் நடத்தலாம் என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில், சென்னை உட்பட பல ஊர்களிலும் கொரோனா விட்டேனா பார் என்று சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என்று பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், உலகின் 186 நாடுகளில் 130 கோடி மாணவர்களின் கல்வி கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரத்தையும் புறம் தள்ளுவதற்கில்லை.

இப்போது நம் நாட்டுக்கு வருவோம். ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டால், உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவீர்களா... இந்த விஷயத்தில் உங்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன... இந்த சர்வே வழி உங்கள் மனநிலையைத் தெரியப்படுத்துங்கள்.

கொரோனா பிரச்னையில், பள்ளிக்கூடங்கள் உங்கள் பிள்ளைகளை எப்படியெல்லாம் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? இரண்டு வரிகளில் எங்களுக்கு மெயில் செய்யுங்கள். இ-மெயில் முகவரி lifestyle@vikatan.com

அடுத்த கட்டுரைக்கு