Published:Updated:

இடைநிற்றல் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் - தமிழக அரசின் புதிய முயற்சி!

சிறப்புப் பயிற்சி வகுப்புகள்

கல்லூரி படிப்பிற்கு வருமானம் ஒரு தடையாக இருந்தால் இதற்கென்று பள்ளியில் டோனா என்ற ஆசிரியர் இருப்பார், அவரை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அணுகலாம்.

இடைநிற்றல் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் - தமிழக அரசின் புதிய முயற்சி!

கல்லூரி படிப்பிற்கு வருமானம் ஒரு தடையாக இருந்தால் இதற்கென்று பள்ளியில் டோனா என்ற ஆசிரியர் இருப்பார், அவரை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அணுகலாம்.

Published:Updated:
சிறப்புப் பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கடந்த 2021-2022 கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களில் பலர் உயர்கல்விக்குச் சென்றுவிட்டனர். எனினும் சூழ்நிலை காரணமாக சில மாணவர்கள் இன்னமும் கல்லூரிகளுக்குச் செல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்காகவே தமிழ்நாட்டில் உயர்கல்விக்கான சிறப்பு முகாம்கள் இதுவரை இரண்டு முறை நடத்தப்பட்டிருக்கின்றன. இதன் மூன்றாவது நிகழ்வு கடந்த அக்டோபர் 28-ம் தேதி நடைபெற்றது.

சிறப்புப் பயிற்சி வகுப்புகள்
சிறப்புப் பயிற்சி வகுப்புகள்

இதன்படி சென்னை வேளச்சேரியிலுள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 12-ம் வகுப்பு முடித்தும் கல்லூரிகளுக்குச் செல்லாத மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் அழைத்துச் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் சிறப்புப் பயிற்சி பெற்ற முதன்மைப் பயிற்சியாளர்கள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கல்லூரி படிப்பின் முக்கியத்துவத்தையும், வழிகாட்டுதல்களையும் தகுந்த விளக்கத்துடன் தந்தனர்.

இது குறித்துப் பேசிய பயிற்சியாளர், "மருத்துவப் படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் அதில் சேர முடியவில்லை என்று சோர்வுற்று இருக்காமல் துணை மருத்துவப் படிப்பையும் தேர்வு செய்யலாம். ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போனால் அதனால் அப்படியே முடங்கி விடாமல் உங்களுக்கு ஆர்வமுள்ளதில் சேர என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். கல்லூரி படிப்பைத் தொடர்வது ஒரு மாணவனது கையில் மட்டும் இல்லை அதில் பெற்றோருடைய பங்கு அதிகம் தேவைப்படுகிறது. குடும்பச் சூழல் காரணமாகத்தான் நிறைய மாணவர்களால் கல்லூரி செல்ல முடிவதில்லை. ஆனால் அரசுக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்காக பல்வேறு வகையான உதவித்தொகைகளையும், சலுகைகளையும் அரசு அளிக்கின்றது. உங்கள் கல்லூரி படிப்பிற்கு வருமானம் ஒரு தடையாக இருந்தால் இதற்கென்று பள்ளியில் டோனா என்ற ஆசிரியர் இருப்பார், அவரை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அணுகலாம். அவர் உங்களுக்குச் சரியான வழிகாட்டுதலுடன் உங்களுக்கான உதவித்தொகையைப் பெறுவது எப்படி என்பது குறித்து வழிநடத்துவார்.”

சிறப்புப் பயிற்சி வகுப்புகள்
சிறப்புப் பயிற்சி வகுப்புகள்
மேலும் கல்லூரி படிப்பை முடித்ததும் இருக்கும் வேலைவாய்ப்புகள் என்ன, அதைத் தேர்வு செய்வது எப்படி, வேலைக்கு உத்தரவாதம் தரும் படிப்புகள் எவை போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.