Published:Updated:

பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: அழைப்பிதழில் இந்தி... கண்டித்த அன்புமணி!

பாரதிதாசன் பல்கலைக்கழகம்
News
பாரதிதாசன் பல்கலைக்கழகம்

அழகான தமிழ் முழுக்கத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ள நிலையில், இந்தி முழக்கத்தை பாரதிதாசன் பல்கலைக்கழகம் பயன்படுத்தியிருப்பது இந்தித்திணிப்புதான்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்த நிலையில், 37-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமைவகித்து மாணவர்களுக்குப் பட்டமளித்து உரையாற்றவிருக்கிறார். தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, டெல்லி இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத் தலைவர் கனகசபாபதி ஆகியோரும் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் ‘Azadi Ka Amrit Mahotsav’ என்ற இந்தி வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குள்ளான இன்விடேஷன்
சர்ச்சைக்குள்ளான இன்விடேஷன்

இதைக் கடுமையாகக் கண்டித்து பா.ம.க இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், `திருச்சியில் நடைபெறவிருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பிதழில், விடுதலை நாள் பவள விழாவைக் குறிக்க `Azadi Ka Amrit Mahotsav’ என்ற இந்தி முழக்கம் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கதாகும். விடுதலை நாள் பவள விழாவுக்கான வாசகமான Azadi Ka Amrit Mahotsav என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை `சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா’ என தமிழக அரசு தமிழாக்கம் செய்துள்ளது. அதைத்தான் பயன்படுத்த வேண்டும். அதை பாரதிதாசன் பல்கலைக்கழகம் மீறியுள்ளது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அன்புமணி ட்வீட்
அன்புமணி ட்வீட்

அழகான தமிழ் முழுக்கத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ள நிலையில், இந்தி முழக்கத்தை பாரதிதாசன் பல்கலைக்கழகம் பயன்படுத்தியிருப்பது இந்தித்திணிப்புதான். தமிழக அரசின் ஆணையை மதிக்காத பாரதிதாசன் பல்கலைக்கழகம் யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது? அனைத்துத் தமிழக அரசு நிறுவனங்களும் மாநில அரசின் ஆணையை மதிப்பதை உறுதிசெய்ய வேண்டும். ஆணையை மதிக்காமல் இந்தி முழக்கத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்கள்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ட்விட்டரில் காட்டமாகத் தன்னுடைய கருத்தை முன்வைத்துள்ளார்.