Published:Updated:

UPSC: "வேலை கேட்கவில்லை, வாய்ப்பு தானே கேட்கிறோம்!" - கூடுதல் தேர்வு கோரிக்கை குறித்து மாணவர்கள்

நோய் தொற்று குறித்தான அச்சுறுத்தல், பயிற்சி மையங்களின் மூடலால் வீட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயம், குடும்பத்தின் பொருளாதார நிலையின்மை ஆகிய அனைத்து நெருக்கடிகளையும் அவர்கள் ஒரே நேரத்தில் சந்திக்க நேரிட்டது.

UPSC: "வேலை கேட்கவில்லை, வாய்ப்பு தானே கேட்கிறோம்!" - கூடுதல் தேர்வு கோரிக்கை குறித்து மாணவர்கள்

நோய் தொற்று குறித்தான அச்சுறுத்தல், பயிற்சி மையங்களின் மூடலால் வீட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயம், குடும்பத்தின் பொருளாதார நிலையின்மை ஆகிய அனைத்து நெருக்கடிகளையும் அவர்கள் ஒரே நேரத்தில் சந்திக்க நேரிட்டது.

Published:Updated:

கடந்த இரண்டாண்டு காலமாய் உலகின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் கட்டிப்போட்ட ஒன்று கொரோனா பெருந்தொற்று. தற்போது நாம் அனைவரும் நம் இயல்பு வாழ்க்கைக்குக் கொஞ்ச கொஞ்சமாய் திரும்பிக்கொண்டிருப்பினும் அக்குறிப்பிட்ட காலகட்டங்களில் நாம் சந்தித்த இழப்புகள், பாதிப்புகள் அனைத்தும் ஈடுசெய்யமுடியாத ஒன்றே. அப்படி பாதிப்பட்ட ஒவ்வொரு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு வேண்டியவற்றை செய்து கொடுத்து வருகிறது மத்திய மாநில அரசுகள். ஆனால் ஒரு தரப்பினரின் கோரிக்கை மட்டும் வெகு நாட்களாய் செவி சாய்க்கப்படாமலேயே இருக்கிறது.

UPSC
UPSC

இந்திய நாட்டின் மிக கடினமான தேர்வுகளில் ஒன்று குடிமைப் பணியிடங்களுக்கான UPSC தேர்வு. கடினத்தன்மையைத் தாண்டி வயது வரம்புகள், மாறுபடும் தேர்வு எழுத்தக்கூடிய வாய்ப்புகளின் எண்ணிக்கைகள் என பல்வேறு காரணிகளைக் கொண்டுள்ளது அத்தேர்வு. மிகக் கடின உழைப்பு அதீத அர்ப்பணிப்பு ஆகியவை அத்தேர்வில் வெற்றி பெறுவதற்கான அடிப்படை குணங்கள். இப்படி இருக்க கொரோனா லாக்-டவுன் தேர்விற்காக தயாராகுபவர்களின் சமநிலையை பெருமளவில் களைத்துப்போட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டாண்டு காலத்தில் தேர்வு எழுதியவர்கள் இதில் இன்னும் அதிகமான பாதிப்புக்குள்ளானார்கள். நோய் தொற்று குறித்தான அச்சுறுத்தல், பயிற்சி மையங்கள் மூடியதால் வீட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயம், குடும்பத்தின் பொருளாதார நிலையின்மை ஆகிய அனைத்து நெருக்கடிகளையும் அவர்கள் ஒரே நேரத்தில் சந்திக்க நேரிட்டது. இந்த எதிர்பார்காத காரணிகளால் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் தேர்வுகளை முழுமையாக எழுத முடியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எனவே இந்த இரண்டு ஆண்டுகளையும் தேர்வு எழுதிய கணக்கில் எடுத்துக்கொள்ளாது கூடுதல் வாய்ப்பு தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கை. இதுகுறித்தான முயற்சிகளை இந்தியா முழுவதும் உள்ள UPSC தேர்வர்கள் பல மாத காலமாக மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியது, ட்விட்டர் தளத்தில் ஒருங்கிணைந்த பிரசாரத்தை அரங்கேற்றியது என தொடர்ந்து வரும் இவர்களின் கோரிக்கைகளுக்கு எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை அரசு. இது குறித்து மதுரையை சேர்ந்த UPSC தேர்வர் ஒருவரிடம் பேசினோம்.

“ கொரோனாவின் பாதிப்பிற்கு நம்மில் யாருமே விதிவிலக்கல்ல. இந்த இரண்டு வருட பேரிடர் காலம் தேர்வுக்குத் தயாராகி வந்த எங்களுக்கு பல்வேறு புதிய சவால்களை அளித்தது. அதிலும் குறிப்பாக கிராமப் பின்னணியில் இருந்து நகரங்களுக்கு பயிற்சிக்காக வந்தவர்கள், பொருளாதார ரீதியாக சுயமாக சமாளித்து தேர்வுக்காக தயாராகி வந்த அனைவரும் வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கொரோனா தொற்றின் முதல் அலையிலும் சரி இரண்டாவது அலையிலும் எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. மே மாதம் நடக்கவேண்டிய தேர்வை அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக அக்டோபர் மாதத்திற்குத் தள்ளி வைத்தது. ஆனால், பேரிடரில் இருந்து எங்களால் முழுமையாக வெளிவர முடியவில்லை. இதில் வயது காரணமாகவோ அல்லது தங்களது கடைசி தேர்வை எழுதியவர்களுக்கு இனி வாய்ப்பே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே கூடுதலாக தேர்வு எழுத வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே நாங்கள் அரசிடம் வைத்திருக்கும் கோரிக்கை. இது போன்ற ஒரு சூழல் 2011-ம் ஆண்டு ஏற்கெனவே ஏற்பட்டிருக்கிறது. UPSC தேர்வுகளுக்கான புதிய சிலபஸ் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதை ஈடுசெய்வதற்காக 2015-ம் ஆண்டு ஒரு கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்தக் கோரிக்கை வைத்துள்ளவர்களில் பெரும்பான்மையானோர் 30 வயதுக்கு மேற்பட்டவர்களே. நாங்கள் யாரும் அரசிடம் எங்களுக்கு வேலை வேண்டும் கேட்கவில்லை, தேர்வு எழுதுவதற்கு மற்றொரு வாய்ப்பே கேட்கிறோம். ஏனென்றால் இதை மட்டும் நம்பியே பல ஆண்டுகளாக இதில் உழைப்பவர்கள் இதில் அதிகம். முப்பது வயது தாண்டிய பெண்களுக்கு இந்த பாதிப்பு இன்னும் அதிகம். இந்த வருடத்திற்கு இல்லை என்றாலும் அடுத்த வரும் ஆண்டுகளில் கூடுதல் வாய்ப்பு கிடைத்தால் எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் எடுத்து செல்ல வேண்டும் என்பது எங்களின் தாழ்மையான கோரிக்கை” என்றார் அவர்.

Mrs.Vaishnavi Shankar
Mrs.Vaishnavi Shankar

இதுதொடர்பான தேர்விற்கான பயிற்சி மையங்களின் கருத்தை அறிய சங்கர் IAS அகெடமியின் இயக்குனர் திருமதி. வைஷ்ணவி சங்கரிடம் பேசினோம் “ இந்தியாவின் பல மாநிலங்களிலும் கோவிட் தொற்றின் பாதிப்பு மிக அதிக அளவில் இருந்தது. எனவே கூடுதல் வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அது மிக நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறன். 2020-ம் ஆண்டு தேர்வை பொறுத்தவரையில் தேர்வர்கள் முந்தைய ஆண்டே தயாராகி இருப்பர். ஆனால் 2021-ம் ஆண்டிற்கு அரசு நிச்சயம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை அரசிடம் எடுத்து செல்லும்போது எங்களின் முழு ஆதரவு அவர்களுக்கு உண்டு

இதுவரை இதற்கான எந்த நடவடிக்கைகளையும் அரசு தொடங்கவில்லை. ஆனால், அவர்கள் நினைத்தால் ஒரு ஆண்டிற்கான விலக்கு நிச்சயம் அளித்திட முடியும் ” என்று கூறினார்.

செவிசாய்த்திடுமா மத்திய அரசு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism