Published:Updated:

IIM-களில் மேலாண்மை படிக்க விரும்புறீங்களா... CAT - 2019 தேர்வுக்குத் தயாராகுங்க! #CatExam

தேனி மு.சுப்பிரமணி

இந்தத் தேர்வுக்கு (Common Admission Test – CAT) விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 50 சதவிகித மதிப்பெண்ணுக்குக் குறைவின்றி, ஏதாவதோர் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 45 சதவிகித மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

education
education

இந்தியாவில் செயல்பட்டுவரும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் மற்றும் சில மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றிருக்கும் முதுநிலை மேலாண்மைப் பட்டப்படிப்பு மற்றும் மேலாண்மை ஆய்வாளர் படிப்புகள் போன்றவற்றில் சேருவதற்கான பொதுச் சேர்க்கைத் தேர்வுக்கு (Common Admission Test – CAT 2019) விண்ணப்பிக்கலாம்.

education
education

முதுநிலை மேலாண்மைப் பட்டப்படிப்பு

இந்தியாவில் அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, புத்தகயா, கொல்கத்தா, இந்தூர், ஜம்மு, காசிப்பூர், கோழிக்கோடு, லக்னோ, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, ரோதக், சம்பல்பூர், சில்லாங், சிர்மவுர், திருச்சிராப்பள்ளி, உதய்பூர், விசாகப்பட்டினம் ஆகிய 20 இடங்களில் அமைந்திருக்கும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (Indian Institutes of Management (IIMs)) இரண்டு வருடகால அளவிலான முதுநிலைப் பட்டப்படிப்புகள் (Post Graduate Programmes in Management) இடம்பெற்றிருக்கின்றன.

மேலாண்மை ஆய்வாளர் படிப்பு

இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் அகமதாபாத், புத்தகயா, ஜம்மு, சம்பல்பூர், சிர்மவூர், உதய்ப்பூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் முனைவர்பட்ட ஆய்வுப் படிப்புகளும் (Ph.D.), அமிர்தசரஸ், பெங்களூரு, இந்தூர், கோழிக்கோடு, லக்னோ, சில்லாங், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் பிஹெச்.டி படிப்புக்கு இணையான மேலாண்மை ஆய்வாளர் படிப்புகளும் (Fellow Programmes in Management - FPM) காசிப்பூர், ராய்ப்பூர், ரோதக் ஆகிய இடங்களில் EFPM (Executive Fellow Programme in Management) எனும் ஆய்வாளர் படிப்பும், ராஞ்சியில் முனைவர்பட்ட ஆய்வுப்படிப்பு (Ph.D.) மற்றும் EPh.D படிப்பும், கொல்கத்தாவில் Doctoral படிப்பும் இடம்பெற்றிருக்கின்றன.

பிற கல்வி நிறுவனங்கள்

மேற்காணும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் தவிர்த்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர் சேர்க்கைக்கு இந்தப் பொதுச் சேர்க்கைத் தேர்வை அனுமதித்து, தங்களையும் இணைத்துக்கொண்டிருக்கின்றன.

education
education

கல்வித் தகுதி

இந்தத் தேர்வுக்கு (Common Admission Test – CAT) விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 50 சதவிகித மதிப்பெண்ணுக்குக் குறைவின்றி, ஏதாவதோர் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 45 சதவிகித மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. பட்டப்படிப்புக்கான மதிப்பெண் புள்ளிக்கணக்கில் வழங்கப்பட்டிருந்தால், மேற்காணும் சதவிகிதத்துக்கு இணையான புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவம்

https://iimcat.ac.in/ எனும் இணையதளத்தில் 18-9-2019 மாலை 5:00 மணிவரை விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - ரூ.1,900/- எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் - ரூ.950/-

விண்ணப்பம் அனுப்பக் கடைசி நாள்: 18-9-2019

education
education

தேர்வு மையங்கள்

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, வேலூர், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய ஏழு இடங்கள் உட்பட நாடு முழுவதும் 156 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. விண்ணப்பிப்பவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் தேர்வு எழுதுவதற்கான மையங்களாக 4 மையங்கள்வரை குறிப்பிட வேண்டும். இவற்றில் ஏதாவதொரு மையம் தேர்வு எழுதுவதற்காக ஒதுக்கீடு செய்யப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிட்ட மையங்கள் அனைத்தும் நிரம்பிவிட்ட நிலையில் அருகிலுள்ள வேறொரு மையம் ஒதுக்கீடு செய்யப்படும்.

அனுமதிச்சீட்டு

விண்ணப்பித்த மாணவர்கள் இந்தத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டை (Admit Card) 23-10-2019 முதல் 24-11-2019வரை மேற்காணும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தப் பொதுச் சேர்க்கைத் தேர்வு இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் தேர்வு மையங்களில் 24-11-2019 அன்று இரு வேளைகளில் கணினி வழியிலான தேர்வாக நடைபெறவிருக்கிறது.

தேர்வு முடிவுகள் தேர்வு முடிவுகள் 2020-ம் ஆண்டு, ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும். தேர்வில் பெற்ற மதிப்பெண், இந்தத் தேர்வை அங்கீகரிக்கும் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் 31-12-2020 வரை சேர்க்கை பெறுவதற்குத் தகுதியுடையதாக இருக்கும்.

education
education

மாணவர் சேர்க்கை

இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் (Indian Institutes of Management (IIMs)) முந்தைய கல்வியில் பெற்ற மதிப்பெண், பொதுச் சேர்க்கைத் தேர்வில் பெற்ற மதிப்பெண், பணி அனுபவம் போன்ற சில அளவீடுகளை அடிப்படையாகக்கொண்டு, எஸ்சி பிரிவினர் 15%, எஸ்டி பிரிவினர் 7.5% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27%, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் 10% மற்றும் மாற்றுத்திறனாளிகள் 5% என்றும், மீதமுள்ள இடங்கள் பொதுப்பிரிவினர் எனும் இந்திய அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெறும்.

கூடுதல் தகவல்கள்...

பொதுச் சேர்க்கைத் தேர்வு (Common Admission Test – CAT) குறித்த மேலும் பல விவரங்களை அறிய மேற்காணும் இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது இந்த நிறுவனத்தின் உதவி எண்ணான (Help Desk Number) 18002090830 என்பதில் தொடர்புகொள்ளலாம்.