Published:Updated:

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு... தொடரும் சிக்கல்கள், குழப்பத்தில் மாணவர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள் ( Photo: Vikatan / T. Vijay )

சில மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், பெரும்பாலான மாணவர்கள் இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா பெருந்தொற்று கல்விச் சூழலில் ஏற்கெனவே மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. கோவிட்-19 தொற்று தற்போது தீவிரமடைந்துவரும் நிலையில், இன்று (ஏப்ரல் 18) நடக்கவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கடந்த வியாழக்கிழமை ட்விட்டரில் அறிவித்தார்; இளம் மருத்துவ மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எம்.எஸ்., எம்.டி., முதுநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக தேசிய அளவில் நடத்தப்படும் இந்த முதுநிலை நீட் தேர்வு, முன்னதாக ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பெருந்தொற்று காரணமாக ஏப்ரல் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இப்போது கொரோனா பரவல் மேலும் மோசமடைந்திருக்கும் நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. சில மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், பெரும்பாலான மாணவர்கள் இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

இனி நர்சிங் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம்... பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கண்டனம்!

இது குறித்து பேசிய சென்னை அம்பத்தூரில் உள்ள எஸ்வீ மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் வரதராஜன், “எம்.பி.பி.எஸ் மட்டும் படித்தவர்களுக்கு இப்போது மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை. எம்.எஸ்., எம்.டி., போன்ற மேற்படிப்புகள் முடித்திருக்கிறாரா என்று மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர். விருப்பம் ஒருபக்கம் இருந்தாலும், இப்படியான சூழலில் மேற்படிப்பு கட்டாயம் என்பதை பெற்றோரும் உணர்ந்திருப்பதால் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர, மாணவர்கள் தங்களைத் தீவிரமாக தயார்படுத்திக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில், தேர்வு ஒத்திவைப்பு என்பது எதிர்காலம் குறித்த கேள்விகளை மாணவர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. ஒருசிலருக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், பெரும்பாலான மாணவர்கள் தேர்வுக்குப் படிப்பதைத் தொடர்வதா, வேலைக்குச் செல்வதா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர்.

மருத்துவ மாணவர்கள்
மருத்துவ மாணவர்கள்

கொரோனா பரவல் தீவிரமாக இருந்தாலும் தேர்தல், பிரசாரங்கள், கூட்டங்கள், இன்றைக்குக் கும்பமேளாவரை மக்கள் எந்த வழிமுறைகளையும் பின்பற்றாலும் கூடுகின்றனர். ஆனால், தேர்வு எழுதப் போகிறவர்கள் மருத்துவர்கள். அவர்களுக்கு எல்லாவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் தெரியும். மேலும், தங்கள் ஊருக்கு அருகிலேயே இருக்கும் மையத்தில் தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடுகள் இந்தமுறை செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது மாணவர்களை மனதளவில் மிகவும் பலவீனப்படுத்திவிடும்... மாணவர்கள் பெரும்பாலும் எளிய பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்களுடைய பெற்றோரும் மிகுந்த நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றனர்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ஜனவரியில்தான் தேர்வு என்பதால், பயிற்சி வகுப்புகளுக்கு அதுவரை கட்டணம் செலுத்தியிருந்தேன். அப்போது தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பிரச்னை இதிலிருந்து தொடங்கியது. பயிற்சி மருத்துவராகப் பணியாற்றியபோது கிடைத்த ஊதியத்திலிருந்தே தேர்வுக்கான தயாரிப்புகளை மேற்கொண்டிருந்தேன். தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு, அட்மிட் கார்ட் எல்லாம் வந்தபிறகு தேர்வு மையத்துக்குச் செல்ல ரயில், அறை முன்பதிவு செய்திருந்தது எல்லாம் வீணாகிப் போனது. ஜனவரில் தேர்வு நடந்திருந்தால் மே-ஜூன் மாதங்களில் பணியில் சேர்ந்திருப்பேன். வீட்டு நிலைமையை கொஞ்சம் சரிப்படுத்தியிருப்பேன். ஆனால், இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. தேர்வுக்கு முறையான தேதியைக் குறிப்பிட்டால் அதற்குத் தகுந்தமாதிரி தயாராகலாம்; எந்தச் சரியான தகவலுமே இல்லாமல் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது” என்று வேதனை மேலிட பேசுகிறார் தேர்வுக்குத் தயாராக இருந்த மாணவர் ஒருவர்.

மருத்துவப் படிப்பு
மருத்துவப் படிப்பு

பொதுவாக, மே-ஜூன் மாதங்களில் முதுநிலை மாணவர்கள் புதிதாக வந்துவிடுவார்கள். ஆனால், இப்போது தேர்வு தள்ளிக் கொண்டே போக, புதிய மாணவர்கள் எப்போது பணிக்கு வருவார்கள் என்பது தெரியவில்லை. சாதாரண காலங்களிலேயே பணிகள் ஏராளமான இருக்கும் நிலையில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் வேளையில், மருத்துவர்கள் பற்றாக்குறையால், ஏற்கெனவே கொரோனா தடுப்புப் பணியில் உள்ள மருத்துவர்களுக்குக் கூடுதல் சுமை ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது.

என்ன செய்யப் போகிறது அரசு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு