Published:Updated:

சீர்காழி: வீதியில் கிடந்த சீருடைகள்... அரசுப் பள்ளி தலைமையாசிரியை சொல்லும் விளக்கம் இதுதான்!

வீதியில் கிடந்த சீருடைகள்

தமிழக அரசால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுமார் 300 சீருடைகள் வழங்கப்படாமல் , அவை பள்ளிக்கு வெளியே சாலை ஓரத்தில் குவியலாக வீசப்பட்டு கிடந்ததைக் கண்டு அப்பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சீர்காழி: வீதியில் கிடந்த சீருடைகள்... அரசுப் பள்ளி தலைமையாசிரியை சொல்லும் விளக்கம் இதுதான்!

தமிழக அரசால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுமார் 300 சீருடைகள் வழங்கப்படாமல் , அவை பள்ளிக்கு வெளியே சாலை ஓரத்தில் குவியலாக வீசப்பட்டு கிடந்ததைக் கண்டு அப்பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Published:Updated:
வீதியில் கிடந்த சீருடைகள்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி  அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமையாசிரியை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எல்லாப் பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடம் பயிற்றுவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வருடத்திற்கு தமிழக அரசால்  மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுமார் 300 சீருடைகள் வழங்கப்படாமல் , அவை பள்ளிக்கு வெளியே சாலை ஓரத்தில் குவியலாக வீசப்பட்டு கிடந்ததைக் கண்டு அப்பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  

பின்னர் சாலையோரம் வீசப்பட்டுக்  கிடந்த அனைத்து சீருடைகளையும் சேகரித்து பெற்றோர்-ஆசிரியர் கழகத்  தலைவர் கனகசபையிடம் ஒப்படைத்தனர். அனைத்து சீருடைகளும் மூட்டையாக கட்டப்பட்டு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

வீதியில் கிடந்த பள்ளி சீருடைகள்
வீதியில் கிடந்த பள்ளி சீருடைகள்

இது குறித்து ஆச்சாள்புரம் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கனகசபை மற்றும் கிராம கல்விக்குழுத் தலைவர் கருணாகரன் ஆகியோர் கூறுகையில், ``அரசால் வழங்கப்பட்டுள்ள சீருடைகளை பள்ளியின் தலைமயாசிரியை மாணவர்களுக்கு வழங்காமல் வீணாகத்  தெருவோரத்தில் வீசி எறிந்திருப்பது வேதனையளிக்கிறது. இதற்கு காரணமான தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அனைத்து சீருடைகளையும் கட்டாயம்  மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளோம்" என்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியை மல்லிகாவிடம் விளக்கம் கேட்டோம். ``கொரோனா காலத்தில் மாணவர்கள் முழுமையாக பள்ளிக்கு வரவில்லை. அப்போது வந்த மாணவர்களுக்கு கொடுத்தது போக, மீதமுள்ள சீருடைகள் இடப்பற்றாக்குறை காரணமாக பழைய பள்ளிக்கூடத்தில் வைக்கப்பட்டன.

வீதியில் கிடந்த பள்ளி சீருடைகள்
வீதியில் கிடந்த பள்ளி சீருடைகள்

அவை மழையால் நனைந்து சேதமாயின. அதை யாரோ தூக்கிப்போட்டு படம் எடுத்து சர்ச்சையாக்கியிருக்கின்றனர். இது குறித்து முதன்மை கல்வி அலுவலருக்கு விளக்கம் கொடுத்துள்ளேன். மற்றபடி இந்தாண்டு வந்த சீருடைகள் அனைத்தும் முறையாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன" என்றார்.