Published:Updated:

பொறியியல் படிப்பில் பகவத் கீதை! - கல்வியாளர்கள் சொல்வது என்ன?

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் அறிவுறுத்தலின்பேரில், பொறியியல் படிப்பின் 3-வது செமஸ்டரில் இந்தப் படிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் படிப்பில் பகவத் கீதை சேர்க்கப்பட்டிருப்பதுதான் கல்வி வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக். அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் அறிவுறுத்தலின்பேரில், பொறியியல் படிப்பின் 3-வது செமஸ்டரில் இந்தப் படிப்பு சேர்க்கப்பட்டுள்ளது. தத்துவவியல் படிப்பாகப் பகவத் கீதையை இந்த ஆண்டு முதல் எம்.ஐ.டி, ஏ.சி.டி, எஸ்.ஏ.பி, சி.இ.ஜி ஆகிய கல்வி வளாகத்தில் படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகிறது எனவும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

Representational image
Representational image

இதனால், சென்னை அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் மாணவர்கள், பகவத் கீதையைப் பாடமாகப் படிக்கவிருக்கிறார்கள். கல்விக்குள் மதம் சார்ந்த ஒரு நூலைப் படிப்பாக வைத்திருப்பது குறித்து, கல்வியாளர்கள் தங்கள் கருத்துகளையும் பகிர்ந்துவருகின்றனர்.

இதுதொடர்பாக, கல்வியாளர் நெடுஞ்செழியனைத் தொடர்புகொண்டு பேசினோம். `` இது, தேவையில்லாத ஒன்று. ஹியூமானிட்டி என்ற அடிப்படையில் கொண்டுவந்தால் எல்லா மதங்களைச் சார்ந்த நூல்களையும் கொண்டு வர வேண்டியதுதானே.. பல மதங்கள் நம் நாடு முழுக்க நிறைந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றை மட்டும் பிரித்துச் சொல்லிக்கொடுப்பது, மக்களைப் பிரிப்பதுபோலாகிவிடும். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம், சீக்கியம், புத்தம் என அனைத்தையும் சொல்லிக்கொடுக்கலாம். ஆனால், அதை எப்படிச் சொல்லிக்கொடுக்கப்போகிறோம் என்பதுதான் முக்கியம்.

பகவத் கீதை
பகவத் கீதை

ஏற்கெனவே, பொறியியல் கல்வித் தரத்தில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் பின்தங்கியிருக்கின்றன. இதனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதுதான் இப்போதைய அவசியமான தேவை. இதற்காகத்தான் ஐ.ஏ.சி.எஸ்ஸில் இருந்து ஆசிரியர்களை அழைத்துவந்ததாகச் சொன்னார்கள். அப்படி வந்தவர்களால் என்ன கல்வித் தரம் உயர்ந்தது என்றும் தெரிவிக்கவில்லை. தரப் பட்டியலிலும் எந்த முன்னேற்றமும் இல்லை" என்றார் கொதிப்புடன்.