Published:Updated:

நாகை: பள்ளி மேலாண்மைக்குழுவில் குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு இடமா?! - கொதிக்கும் கிராம மக்கள்

பள்ளிக்கல்வித்துறை

குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும், பாதுகாப்புக்காகவும், மேலாண்மைக்குழு உறுப்பினர்களை நியமிப்பார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த பெற்றோர்களுக்கு, குற்றப் பின்னணி உடையவர்களை இடம்பெறச் செய்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாகை: பள்ளி மேலாண்மைக்குழுவில் குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு இடமா?! - கொதிக்கும் கிராம மக்கள்

குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும், பாதுகாப்புக்காகவும், மேலாண்மைக்குழு உறுப்பினர்களை நியமிப்பார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த பெற்றோர்களுக்கு, குற்றப் பின்னணி உடையவர்களை இடம்பெறச் செய்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
பள்ளிக்கல்வித்துறை

``அரசுப் பள்ளி மேம்பாட்டுக்காக ஒவ்வொரு பள்ளியிலும் மேலாண்மைக்குழு அமைத்து அதைச் சிறப்பாகச் செயல்படுத்திட வேண்டும்" என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவு பிறப்பித்திருந்தார் இதனடிப்படையில் தமிழகம் முழுவதுலுள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழுவுக்குப் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஜெகதீசன்
ஜெகதீசன்

இந்நிலையில் நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் நடுநிலைப்பள்ளியில் நடந்த மேலாண்மைக்குழு உறுப்பினர் தேர்வைக் கண்டு பெற்றோர்கள் அதிர்ந்துபோயிருக்கிறார்களாம். கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் பாலு தலைமையில் அப்பள்ளியில் மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டது. இந்த மேலாண்மைக் குழுவில் சமீபத்தில் சர்வதேச கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கி, சிறையிலிருக்கும் கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவரின் சகோதர் முருகானந்தமும் (இவர் மீதும் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன), சமீபத்தில் பண மோசடி செய்த குற்றத்துக்காகச் சிறைக்குச் சென்றுவந்த கீச்சாங்குப்பத்தைச்  சேர்ந்த தமிழ்வாணன் ஆகியோரைத் தேர்ந்தெடுத்ததுதான் இந்தக்  கொதிப்புக்குக் காரணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும், மேலாண்மைக்குழு உறுப்பினர்களை நியமிப்பார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த பெற்றோர்கள் மத்தியில் குற்றப் பின்னணி உடையவர்களை இக்குழுவில் இடம்பெறச் செய்திருப்பது ஆத்திரத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி கீச்சாங்குப்பம் கிராமத்தினரிடம் பேசும்போது,

"நாகையில் நல்லாசிரியர் விருது பெற்றவரும், தமிழக அரசு மாநில கல்விக் கொள்கைக்குழு உறுப்பினராகவும்  உள்ள கீச்சாங்குப்பம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலு, குற்றப் பின்னணிச் சம்பவங்களில் தொடர்புடைய இருவரை பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினராக்கி அழகுபார்த்துள்ள சம்பவம் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தமிழக அரசுக்கும் அவப்பெயரைத் தந்துள்ளது" என்றனர்.

தமிழ்வாணன்
தமிழ்வாணன்

இது குறித்து பள்ளித் தலைமையாசிரியர் பாலுவிடம் விளக்கம் கேட்டோம். ``முருகானந்தம் என்பவரை ஊராட்சி மன்றத் தலைவர் பரிந்துரை செய்திருந்தார். தமிழ்வாணன் என்பவரை பெற்றோர்கள் தேர்வு செய்தனர் . இவர்கள் இருவரும் குற்றப் பின்னணி உடையவர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. தற்போது இது எங்கள் கவனத்துக்கு வந்திருப்பதால் அடுத்த மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தில் தீர்மானம் போட்டு இருவரையும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism