Published:Updated:

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பயிர் வளர்ப்பு, காடு வளர்ப்பு பயிற்சி - தமிழக அரசுக்குக் கோரிக்கை!

மாணவர்கள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பயிர் வளர்ப்பு, காடு வளர்ப்பு குறித்து பயிற்சி அளிப்பதன் மூலம் மாணவர்களுக்கு விவசாயத்தின் முக்கியத்துவம் தெரிய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு சட்டமன்றத்தில், வேளாண்துறைக்கென்று தனியான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நடந்துமுடிந்த நிதிநிலை கூட்டத்தொடரில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பயிர் வளர்ப்பு குறித்து பயிற்சி அளிப்பது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. முன்பெல்லாம் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை மாணவர்கள் பார்த்து வளரும் சூழல் இருந்தது. தற்போது பெருகிவரும் நகரமயமாதல் காரணமாகப் பல மாணவர்களுக்கு விவசாயம் குறித்த தேவையும், புரிதலும் இருப்பதில்லை.

விவசாயம்
விவசாயம்

இந்த காலத்து மாணவர்களுக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், கல்வித்துறையும், வேளாண்துறையும் ஒன்று சேர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விவசாயத்தின் மகத்துவத்தையும், பயிர் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து பயிற்சி அளிக்கவேண்டும். இதுபோன்ற பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கும்போது, வருங்கால இளைய தலைமுறையினருக்கு விவசாயத்தில் அதிகம் நாட்டம் ஏற்பட வாய்ப்பாக அமையும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கை தமிழக அரசு பரிசீலனை செய்யுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism