Published:Updated:

`மகிழ்ச்சி வகுப்புகள் நல்ல மாற்றம் தரும்!'- மெலனியா விசிட்டால் கவனம்பெறும் டெல்லி கல்வித்திட்டம்

மெலெனியா
மெலெனியா ( இந்தியா டுடே )

மகிழ்ச்சிப் பாடத்திட்டம் (happiness curriculam), தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் டெல்லி அரசுப் பள்ளிகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மனைவி மெலனியா ட்ரம்ப் இருவரும் இரண்டுநாள் பயணமாக இந்தியாவுக்கு வந்திருந்தனர். இந்த சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக மெலனியா டெல்லி வகுப்பறைகளின் மகிழ்ச்சிப் பாடத்திட்டத்தைப் பார்வையிட்டு மாணவர்களோடு நேரம் செலவழித்தார். இது, இந்தியா முழுவதும் பரவலாகப் பேசப்பட்டது.

ட்ரம்ப் வருகை... இந்தியாவுக்கு 
என்ன லாபம்?
மெலனியா
மெலனியா
என்டிடிவி

ஆம் ஆத்மி தலைமையிலான மாநில அரசு கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இந்த மகிழ்ச்சிப் பாடத்திட்டம் (happiness curriculam), இரண்டே ஆண்டுகளில் தற்போது டெல்லி அரசுப் பள்ளிகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இறுக்கமான சூழலைத் தளர்த்தி மாணவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய வகையில் செயல்படத் தகுந்தாற்போல இந்தக் கல்விமுறை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இதற்கென தனி பாடத்திட்டக்குழு ஒன்று உள்ளது. இந்தக்குழுவில் 6 உறுப்பினர்கள் இயங்கி வருகின்றனர். இவர்களுள் ஒருவர், உத்தரப்பிரதேசம் கோரக்பூர் பள்ளி ஆசிரியர் சுக்லா.

தற்போதைய துணை முதல்வர் மனிஷ் சிசோடியா சத்தீஸ்கரில் 2004 - 2005-ம் ஆண்டு நடைபெற்ற மனிதவள மேம்பாட்டு முகாமில் கலந்துகொண்டிருந்தார். மனிஷுக்கு அரசியல், அன்னா ஹசாரே என எந்தத் தொடர்பும் இல்லாத காலகட்டம் அது. அந்த முகாமில் முதன்முறையாக சுக்லாவை மனிஷ் சந்தித்திருக்கிறார். சமூக அக்கறை சார்ந்த விஷயங்களில் இருவரும் ஒரே கருத்துகளுடன் இருந்தனர்.

ஜிமிக்கி கம்மல்... ஃபியூஷன் ஸ்டைல்! - இந்தியன் லுக் இவான்கா ட்ரம்ப்
மெலெனியா
மெலெனியா
என்டிடிவி

2015-ம் ஆண்டு ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்ததும் மனிஷ் சுக்லாவை அழைத்து மகிழ்ச்சிப் பாடத்திட்டக் குழுவில் சேர்த்துக் கொண்டார்.

இதுபற்றி சுக்லா தெரிவிக்கும்போது, "திட்டம் தற்போது பெரியளவில் பாராட்டப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்காக உத்தரப்பிரதேச அரசுகூட என்னை அணுகவில்லை. ஆனால், இந்தத் திட்டத்தைத் தங்களுக்கும் பகிருமாறு நேபாள அரசு கேட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தானும் அரபு நாடுகளும் இந்தத் திட்டத்தின்மீது அக்கறையும் ஆர்வமும் காட்டிவருகின்றன" என்றார். மேலும், "எவை நம்மை நல்ல மனிதர்களாகவும், மகழ்ச்சியானவர்களாகவும் ஆக்குகின்றன என்பதை மறந்துவிட்டு பழைய கல்வித்திட்டத்திலேயே குருட்டுத்தனமாக மூழ்கிக்கிடக்கிறோம். இந்த மகிழ்ச்சிப் பாடத்திட்டம் 20 ஆண்டுகளில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு