Published:Updated:

வாசகர்களுக்கு வணக்கம்! நீட்- சீட் 20 லட்சம்; மீண்டும் அம்பலமான ஆள்மாறாட்டம்; இதுதான் தகுதித் தேர்வா?

நீட் தேர்வு

கடந்த ஜூலை 17 அன்று கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவிகள் சோதனை செய்யப்பட்டு, உள்ளாடையை அகற்ற கட்டாயப்படுத்தப்பட்டது உச்சகட்ட அதிர்ச்சி.

வாசகர்களுக்கு வணக்கம்! நீட்- சீட் 20 லட்சம்; மீண்டும் அம்பலமான ஆள்மாறாட்டம்; இதுதான் தகுதித் தேர்வா?

கடந்த ஜூலை 17 அன்று கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவிகள் சோதனை செய்யப்பட்டு, உள்ளாடையை அகற்ற கட்டாயப்படுத்தப்பட்டது உச்சகட்ட அதிர்ச்சி.

Published:Updated:
நீட் தேர்வு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து ’சீட்’ பெற்றுக்கொடுக்கும் மோசடியைச் செய்த 8 பேரை சி.பி.ஐ கைது செய்து விசாரித்து வருகிறது.

பீகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா எனப் பல மாநிலங்களை உள்ளடக்கிய நெட்வொர்க்காக செயல்பட்ட இந்த மோசடிக் கும்பல், ஒரு நீட் சீட்டுக்கு 20 லட்சம் வரை விலை நிர்ணயித்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவருக்கு பதிலாக, ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு நீட் தேர்வு எழுதப்படும். தேர்வை எழுதியவருக்கு 5 லட்சம், எழுத ஏற்பாடு செய்த இடைத்தரகர்கள் உள்ளிட்ட மோசடி கும்பலுக்கு 15 லட்சம் என்பது பங்கீட்டுக் கணக்கு. கோச்சிங் சென்டர்களுக்கு இந்த மோசடியில் உள்ள பங்கு குறித்தும் விரிவாக விசாரிக்க இருக்கிறது சி.பி.ஐ.
நீட் தேர்வு மையங்களில் கொலுசு முதல் கம்மல் வரை கழற்றிவைக்கக் கட்டாயப்படுத்துவது தொடங்கி, ஜடையைக்கூட அவிழ்த்துக் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் மாணவிகள். கடந்த ஜூலை 17 அன்று கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவிகள் சோதனை செய்யப்பட்டு, உள்ளாடையை அகற்ற கட்டாயப்படுத்தப்பட்டது உச்சகட்ட அதிர்ச்சி. தங்கள் சுயமரியாதையை இழந்து நீட் எழுதினார்கள் அந்தப் பெண்கள். ஆனால், 20 லட்ச ரூபாய் செலவழித்தால் ஆளையே மாற்றி நீட் தேர்வு எழுதவைக்கலாம் என்ற அவலம்தான் நம்மைத் திகைக்க வைக்கிறது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2019-ம் ஆண்டு தேனி மருத்துவக் கல்லூரியில் படித்த உதித் சூர்யா என்ற மாணவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றது தெரிய வந்தது. அந்த விசாரணையின் நீட்சியில், இன்னும் மூன்று மாணவர்கள் இதேபோல் ஆள்மாறாட்டம் செய்ததும், அவர்கள் வேறு மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்துக்கொண்டிருந்ததும், அதற்கு மூளையாக இருந்த மோசடித் தரகர்கள் கேரளா, மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்ததும் தெரியவந்தது. எனவே, சி.பி.ஐ இப்போது எட்டு பேரை கைது செய்திருக்கும் நடவடிக்கை என்பது, ‘இப்போதான் இதையே கண்டுபிடிக்கிறீங்களா’ ரகம்தான். இதன் அடி, பணம் பாயும் பாதாளத்தில் வேர்ப்பிடித்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீட் தேர்வை நடத்தும் தேர்வு முகமை, ’தேர்வின் உண்மைத்தன்மையை உறுதி செய்யவும், முறைகேடுகளை தடுக்கவும் மிகக் கடுமையான நெறிமுறைகளை பின்பற்றுகிறோம்’ என்று கூறுவது வழக்கம். ஆனால், இந்த மோசடிக் கும்பல்கள், ஏமாற்றுக்காரர்களால் பணத்தைக்கொண்டு எடுத்துக்கொள்ளப்படும் மருத்துவ இடங்கள் எல்லாம், திறமையுள்ள மாணவர்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டியவை. கைதும், விசாரணையும், வழக்கும் அவர்களுக்கு என்ன பதில் கூறும்?
’பணமிருப்பவர்களால்தான் நீட் தேர்வுக்கான கோச்சிங்கிற்கு செலவழித்துப் படிக்க முடியும். ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள்தான் இதில் பாதிக்கப்படுவார்கள்' என்று தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.

நீட் தேர்வு
நீட் தேர்வு

இத்தகைய சூழலில், பணமிருந்தால் போதும் என்பதை நிரூபிக்கும்விதமாக, இத்தகைய தில்லுமுல்லு வேலைகளும் தொடர்கதையாக இருக்கின்றன. அதாவது, குறைவான மதிப்பெண்களே பெறக்கூடியவர்களாக இருந்தாலும், பணமிருந்தால் சீட் நிச்சயம்.
நீட் தேர்வு குறித்து ஏராளமான சர்ச்சைகள் ஆண்டுதோறும் எழுந்து வருகின்றன. இதுபோன்ற மோசடிகள், அந்தத் தேர்வு நடைமுறை குறித்தே சந்தேகம் எழுப்ப வைக்கின்றன. உண்மையாக உழைப்பைக் கொட்டி படிக்கும் பல லட்சம் மாணவர்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும் இதுபோன்ற மோசடிகள் வேரறுக்கப்பட வேண்டும். பணம் இருந்தால் எதையும் செய்து, எந்த இடத்தையும் அபகரிக்கலாம் என்ற நிலை ஆபத்தானது.