Published:Updated:

`ரூ.260 வரை 600 வரை.. வகுப்புவாரியாக வசூலித்த அரசுப் பள்ளி!’ - திண்டுக்கல் சர்ச்சை

போஸ்டர்
போஸ்டர்

அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையின் போது பணம் வசூல் செய்தாத போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு மாணவர் சேர்க்கையின்போது, மாணவர்களிடன் பணம் வசூல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் விளக்கம் கேட்க, அதற்கு பள்ளியில் இருந்து சரிவர பதில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

திண்டுக்கல்: கழுத்தில் கத்தி...  தற்கொலைக்கு முயன்றவரை தடுக்கச் சென்ற பெண் காவலர் காயம்!
போஸ்டர்
போஸ்டர்

இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள், இன்று பள்ளி நிர்வாகத்தையும், மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகளையும் கண்டித்து போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டினர்.

``கல்வித்துறை சேவைத் துறையா… கயவர்களின் வேட்டைத் துறையா…” என்ற வாசகத்தோடு தொடங்கும் போஸ்டரில்,``6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ 260, 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்புகளுக்கு ரூ.310, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ரூ.600 என முறைகேடாக வசூல் செய்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு.

திண்டுக்கல்: `திடீர் ரெய்டு; பறிபோன பணம், சொத்து ஆவணங்கள்!’ - சிக்கிய போலி அரசு அதிகாரிகள்
அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்
Representational Image

முறைகேடாக வசூலித்த பணத்தை மாணவர்களிடம் ஒப்படைப்பு செய்திடு..” என்ற வாசகங்கள் அந்த போஸ்டரில் இடம்பெற்றிருந்தன. மாணவர்கள், பெற்றோர்கள் நல கூட்டமைப்பு சார்ப்பில் ஒட்டப்பட்டிருப்பதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை போனில் தொடர்புகொண்டு பேசினோம். ``பள்ளி வளர்ச்சிப் பணிக்காக எனக் கூறி தலைமையாசிரியர் பணம் வசூல் செய்திருக்கிறார். உடனடியாக பணத்தை மாணவர்களிடம் திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டிருக்கிறேன். இனி இது போன்று நடக்காது” என்றார்.

போஸ்டர்
போஸ்டர்
கத்தி முனையில் பூசாரி குடும்பம்; 100 பவுன் நகைக் கொள்ளை! -திண்டுக்கல் அதிர்ச்சி

அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துவரும் சூழலில், மாணவர் சேர்க்கையின் போது அரசுப்பள்ளி நிர்வாகம் பணம் வசூல் செய்வது நியாயமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த விவகாரத்தை விடப்போவதில்லை என அழுத்தமாக கூறுகின்றனர் எரியோடு பகுதி மக்கள். இச்சம்பவம், மாவட்ட கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு