Published:Updated:

போதுமான கழிவறை இல்லை; மின்விசிறி இல்லை... கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்!

கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்

விடைத்தாள் திருத்தும் அறைகள் மிகவும் குறுகியதாகவும், பெண் ஆசிரியைகளுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லாத பள்ளியாக இருப்பதாலும் ஆசிரியைகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

போதுமான கழிவறை இல்லை; மின்விசிறி இல்லை... கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்!

விடைத்தாள் திருத்தும் அறைகள் மிகவும் குறுகியதாகவும், பெண் ஆசிரியைகளுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லாத பள்ளியாக இருப்பதாலும் ஆசிரியைகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

Published:Updated:
கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்

ஆண்டுதோறும் கோடைக்காலத்தின் போது விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பல இடங்களில், அடிப்படை வசதிகளின்றி ஆசிரியர்கள் சிரமப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், திண்டுக்கல் எம்.எஸ்.பி.சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள 500 ஆசிரியர்கள் அடிப்படை வசதியின்றி சிரமப்படுவதாக புகார் கிளம்பியிருக்கிறது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் 2 மையங்கள், பழநியில் 2 மையங்கள் என திண்டுக்கல் மாவட்டத்தில் 4 இடங்களில் விடைத்தாள் திருத்தம் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த 2 ஆம் தேதி தொடங்கிய விடைத்தாள் திருத்தும் பணி, ஜூன் 18 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்தப் பணியில் 2 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதில் 70 சதவிகிதத்தினர் பெண்கள். திண்டுக்கல் எம்.எஸ்.பி.சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுவரும் விடைத்தாள் திருத்தும் பணியில் 500 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியைகள் உள்ளனர்.

தேர்வு
தேர்வு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், இப்பள்ளி ஆண்கள் பள்ளி என்பதால் பெண்களுக்கான கழிப்பறை வசதி இல்லை. மொத்தமாகவே 5 கழிப்பறைகள் உள்ளன. அதுவும் சுத்தமில்லாமல் இருக்கிறது. அதுமட்டுமல்ல வகுப்பறையில் போதிய மின் விளக்கு மற்றும் மின் விசிறி வசதி இல்லாததால் ஆசிரியைகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பேட்ரிக் ரெய்மாண்ட்
பேட்ரிக் ரெய்மாண்ட்

இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட்டிடம் பேசினோம். ''விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் தயக்கம் காட்டுதுவதே திருத்தும் பணிக்கான மையங்களில் அடிப்படை வசதி இல்லாததுதான். மையங்களுக்கு பொறுப்பாக இருக்கும் கல்வி அலுவலர்கள் பஸ் போக்குவரத்து, ஹோட்டல், டீக்கடைகள் இருக்கும் பகுதியில் உள்ள பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளிக்கு ஆசிரியர்கள் பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்வதே மிகவும் சிரமமானதாக இருக்கும். அங்கே ஹோட்டல்கள் கூட இல்லை. மேலும் விடைத்தாள் திருத்தும் அறைகள் மிகவும் குறுகியதாகவும், பெண் ஆசிரியைகளுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லாத பள்ளியாக இருப்பதாலும் ஆசிரியைகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதுமட்டுமில்லாது, தரைத்தளத்தில் திருத்தும் அறைகளை ஒதுக்காமல் 3-வது மாடி வரை ஏறி இறங்க வேண்டிய நிலை இருப்பதால் மூத்த ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.

கழிப்பறை
கழிப்பறை

மின்விசிறிகூட இல்லை. வெயில் அதிகமாக உள்ள சூழலில், இதுபோன்ற சிரமங்களால் ஆசிரியர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே விசாலமான இடவசதி உள்ள இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்களை அமைக்கவேண்டும். வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்காகவே தனியான கட்டட வசதிகளைக் கூட ஏற்படுத்தலாம். அங்கேயே விடைத்தாள்களை பாதுகாத்தும் வைக்கலாம்.

கல்வி மாவட்டத்தை கருத்தில் கொள்ளாமல் விடைத்தாள்களை சமமாக பங்கீட்டு கொடுக்க வேண்டும். மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் நெருக்கடி குறையும். விடைத்தாள் திருத்துவதற்கான மதிப்பூதியம் கூட்ட வேண்டும். இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தேர்வு அறை
தேர்வு அறை

நல்ல சமூகத்தை மாணவர்களால் மட்டுமே உருவாக்க முடியும் என்பார்கள். அந்த மாணவர்களையே உருவாக்கும் ஆசிரியர்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்பதை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism