Published:Updated:

கல்வி வளர்ச்சியில் அமெரிக்காவை விஞ்சுகிறதா தமிழ்நாடு? #GER #FactCheck

Graduate
News
Graduate

அடுத்த நான்காண்டுகளில் தமிழகம் 60% GER எட்ட வேண்டுமென இலக்கு வைத்திருக்கிறது. ஆக, தமிழக முறையை மத்திய அரசாங்கம் பரிசீலனை செய்யுமா என்பது தனி விவாதம்.

செய்தி என்பது சுருங்கி வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளுக்குள் ஒளிந்துகொண்ட பின், அந்த வாட்ஸ்அப் ஃபார்வார்டுகளுக்கு பதில் சொல்வதே மிகப்பெரிய வேலையாகிவிடுகிறது. சமயங்களில் உண்மைச் செய்திகளும்கூட வாட்சாப்பில் வருகிறது. சரி, GER விஷயத்துக்கு வருவோம்.

GER
GER

தமிழகத்தின் கல்வித்தரம் என்பது இந்தியாவிலேயே மிகவும் சிறப்பானது. GER (Gross Enrollment Ratio) என்பது பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கு எனத் தனித்தனியே எடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட வயதில் ஒரு தேசத்தில் இருக்கும் மாணாக்கர்கள், அந்த வயதினர் சார்ந்த படிப்புகளில் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதன் ஒப்பீடே GER. இது சமயங்களில் 100% அதிகமாகக்கூட இருக்கும். காரணம், 20 வயதிலும் சிலர் தொடர்ந்து பள்ளிகளில் படித்துக்கொண்டிருப்பார்கள். தமிழகத்தின் பள்ளிகளுக்கான GER 112%. 2010-2011 கணக்கின்படி, தமிழகம் இந்தியாவில் ஒன்பதாவது இடத்தில் இருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சரி, அப்போது இந்த 49% கணக்கு?

இது உயர்படிப்புகளுக்கானது. All India Survey on Higher Education 2018-19 கணக்கின்படி, இந்தியாவில் தமிழகம் 49% பெற்று மூன்றாமிடத்தில் இருக்கிறது. 53.9 சதவிகிதத்துடன் முதலிடத்தில் சிக்கிம் இருக்கிறது. ஆனால், சிக்கிமில் மொத்தம் இருப்பதே 16 கல்லூரிகள்தான். அதுவும் சிக்கிம் மிகச்சிறிய மாநிலம். இரண்டாமிடத்தில் இருப்பது சண்டிகர். சண்டிகர் யூனியன் பிரதேசம். ஆக, இந்தியாவில் சிறப்பான GER எனில், அது தமிழகம்தான் அதில் மாற்றுக்கருத்தே இல்லை. காரணம், அதிகம் படித்தவர்கள் எனச் சொல்லப்படும் கேரளாவிலேயே GER 37% தான். பிரதமரின் மாநிலமான குஜராத்தில் 20.4% என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரப் பிரதேசம் (25.8%), மேற்கு வங்கம் (19.3%), ராஜஸ்தான் (23%) போன்ற மாநிலங்களை ஒப்பிட்டாலே, தமிழகம் எத்தகைய உயரத்தில் இருக்கிறது என்பது தெரியும். போதிய பாடப்பிரிவுகளோ, கல்லூரிகளோ இல்லாமல் இருப்பதுதான், கேரளாவின் குறைவான GER-க்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது. கேரளாவைப் போல குஜராத்தில் குறைவான கல்லூரிகள் இருக்கின்றதா எனத் தேடினால், அதுவும் இல்லை. கேரளா (1,280), குஜராத் (2,214).

GER
GER
nic

ஆக, இந்தியாவிலேயே சிறந்த கல்விமுறை தமிழகத்தில்தான் உள்ளது என்பதற்கான சிறு எடுத்துக்காட்டு இது. 2030-க்குள் ஒட்டுமொத்த இந்தியாவும் 50% GER எட்ட வேண்டுமென இலக்கு வைத்திருக்கிறார்கள். அடுத்த நான்காண்டுகளில் தமிழகம் 60% எட்ட வேண்டுமென இலக்கு வைத்திருக்கிறது. ஆக, தமிழக முறையை மத்திய அரசாங்கம் பரிசீலிக்குமா என்பதே இங்கே தனியாக விவாதிக்கப்பட வேண்டியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

UPDATE

இந்தத் தகவல்கள் குறித்து தங்களது விளக்கத்தைத் தர முன்வந்துள்ளனர் DreamTn குழுவினர். அதை இங்கு படிக்கலாம். அவர்களின் விளக்கமும், நமது விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சரி, வாட்ஸ்அப் வதந்திகளுக்கு வருவோம். உண்மையில் அமெரிக்காவின் GER 41% தானா? அந்த கார்டில் இருக்கும் urlஐ க்ளிக் செய்தாலே அதற்கான விடை இருக்கிறது. அந்தப் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பது College Enrollment Rates. 18 முதல் 24 வயது மாணாக்கர்களில் இரண்டு அல்லது நான்காண்டு கால மேற்படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் இதன் கீழ் வருவார்கள். அதுதான் 2018-ன் கணக்குப்படி 41%.

Overall College Enrollment Rate
Overall College Enrollment Rate
NCES

பள்ளிப் படிப்பு முடித்தவுடன் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 22 லட்சம். அதாவது, அமெரிக்காவில் 61% பேர் பள்ளிப்படிப்பு முடித்தவுடன் இரண்டு அல்லது நான்காண்டு பாடத்திட்டங்களுக்கு விண்ணப்பித்து விடுகிறார்கள்.

Immediate College Enrollment rate
Immediate College Enrollment rate
NCES

ஆப்பிளை ஆரஞ்சுடன் ஒப்பிடக்கூடாது என்பார்கள். அது போலத்தான் தமிழகத்தை, அமெரிக்காவுடன் ஒப்பிடுவது.

சரி யுனெஸ்கோ கணக்குப்படி, GER-ஐ எடுத்துக்கொண்டாலும், அமெரிக்கா எங்கோ இருக்கிறது. 2017 கணக்குப்படி, உயர்படிப்புகளுக்கான GER (Tertiary Education) அமெரிக்கா 88.17%.

US GER (18-22 years)
US GER (18-22 years)
INDIA GER (18-22 years)
INDIA GER (18-22 years)

இந்தியா 28.06% (2017) http://uis.unesco.org/en/country/in. (யுனெஸ்கோ தளத்தில் மாநிலங்களுக்கான பட்டியல் இல்லை).

GER என்றான பின் இரு தேசங்களுக்கும் பொதுவான ஒரு மெட்ரிக்கில் இருந்துதான் நம் ஒப்பீடுகளை மேற்கொள்ள வேண்டும். ஆக, பொருந்தா ஒப்பீடுகளைச் செய்யாமல், இந்தியாவுக்குள் இருக்கும் மாநிலங்களுக்குள் தமிழகத்தை ஒப்பிடுவதுதான் சரியாக இருக்கும்.

தொடர்பு பக்கங்கள்

இந்தியா GER

http://uis.unesco.org/en/country/in

அமெரிக்க GER

http://uis.unesco.org/en/country/us

All India Survey on Higher Education 2018-19