Published:Updated:

`549 பணியிடம்; 7000 விண்ணப்பம்'- துப்புரவுப் பணிக்குப் போட்டி போடும் பொறியியல் பட்டதாரிகள்!

கோவை மாநகராட்சியில் துப்புரவுப் பணிக்குப் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

பட்டதாரிகள்
பட்டதாரிகள்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 549 துப்புரவுப் பணியிடங்கள் (நிரந்தரப்பணி) காலியாக உள்ளன, இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்கு சுமார் 7,000 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி

இவர்களுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது. முதல் நாளன்று சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் கலந்து கொண்டதால் பெரும் அதிர்ச்சி உண்டானது,

பக்கவாதத்தால் முடங்கினார் - பணிப்பெண்ணின் குடும்பத்தைக் காக்க பட்டதாரி தம்பதியின்  நெகிழ்ச்சி செயல்!

பி.இ, பி.டெக் பி.எஸ்சி, எம்.எஸ்.சி படித்த இளைஞர்கள் நேர்காணலுக்கு வந்திருந்தனர். முக்கியமாக, ஏரோநாட்டிகல் பொறியியல் பட்டதாரி ஒருவரும் நேர்காணலுக்கு வந்திருந்தார். குப்பை அள்ளுதல் சுகாதாரத்தைப் பேணிகாத்தல் உள்ளிட்ட துப்புரவுப் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி எழுத்தறிவு மட்டுமே, தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது.

பட்டதாரிகள்
பட்டதாரிகள்

அலவன்ஸ், பேட்டா எல்லாம் சேர்த்து மாதம் ரூ.20,000 வரை சம்பளம் வழங்கப்படும். வேலையில்லா திண்டாட்டம் காரணமாக முதுகலை மற்றும் பொறியியல் பட்டதாரிகளும் இந்தப் பணிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

குடும்பத்தோடு நேர்காணலுக்கு வந்த சில பட்டதாரி இளைஞர்களிடம் பேசியபோது, "நாங்கள் நன்கு படித்திருக்கிறோம்.

பட்டதாரிகள்
பட்டதாரிகள்

ஆனால், எங்களுக்கான பணி கிடைக்கவில்லை. அதனால், வேறு வழியின்றி இந்தப் பணிக்கு விண்ணப்பித்தோம்" என்றனர்.