Published:Updated:

``மோடியும் ஒரு காலத்தில் நீட்டை எதிர்த்தார்" - நீட் குறித்து பா.ஜ.க., தி.மு.க கருத்துப் பகிர்வு

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக அரசு இரண்டு சட்ட மசோதாக்களை இயற்றியது. ஆனால், இவ்விரு சட்ட மசோதாக்களும் ஜனாதிபதி தரப்பால் நிராகரிக்கப்பட்டுவிட்டது என்பது சில தினங்களுக்கு முன்புதான் தெரிய வந்தது.

நீட் தமிழகத்தில் தொடரும்
நீட் தமிழகத்தில் தொடரும் ( விகடன் )
மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தியும் நீட் தேர்வுக்கான விலக்கு பெற இயலவில்லை. வருத்தமாக இருக்கிறது
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி
எடப்பாடி
விகடன்

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக அரசு இரண்டு சட்ட மசோதாக்களை இயற்றியது. தமிழக சட்டசபையில் இதற்கான அவசரச் சட்டமும் இயற்றப்பட்டது. ஆனால், இவ்விரு சட்ட மசோதாக்களும் ஜனாதிபதி தரப்பால் நிராகரிக்கப்பட்டுவிட்டது என்பது சில தினங்களுக்கு முன்புதான் தெரியவந்தது.

``மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தியும் நீட் தேர்வுக்கான விலக்கு பெற இயலவில்லை. வருத்தமாக இருக்கிறது" எனத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார். மத்திய அரசின் இந்தப் போக்கை, தி.மு.க-கடுமையாக விமர்சித்தது. இதற்கு, பா.ஜ.க தரப்பிலிருந்து எதிர் விமர்சனமும் வந்தது. இத்தகைய சூழலில் இருதரப்பிடமும் கருத்து கேட்டோம்.

கே டி ராகவன் (பாஜக)
கே டி ராகவன் (பாஜக)
ragavan facebook page

இதுகுறித்து பி.ஜே.பி. மாநிலச் செயலாளர் கே.டி.ராகவனிடம் பேசினோம். ``நீட் தேர்வு முறையைக் கொண்டுவந்ததே 2011-ல் காங்கிரஸ்தான். அப்போது தி.மு.க-வும் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்ததுதானே! ஏன், தி.மு.க அப்போது எதிர்க்கவில்லை. ஆனால், அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த தற்போதைய பிரதமர் மோடி நீட்டை எதிர்த்தார்.

காரணம், நீட் தேர்வில் சில சிக்கல்கள் அப்போது இருந்தன. அந்தச் சிக்கல்கள் எல்லாம் மோடியின் ஆட்சியில் களையப்பட்டுவிட்டன. ஆகவே, அவர் தலைமையிலான மத்திய அரசு நீட்டை ஆதரிக்கிறது. நீட் தேர்வு முறையை ஆரம்பத்தில் எதிர்த்த உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படியேதான் இப்போது நீட் தேர்வே நடைபெற்று வருகிறது. நீட்டில் கொண்டுவந்த மாற்றங்கள் நியாயமான முறையில் இருப்பதாலேயே எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

தற்போது, மாணவர்கள் அவரவர் தாய்மொழியிலேயே குறிப்பாக, தமிழ் மாணவர்கள் தமிழிலேயே நீட் எழுதலாம் என்கிற அளவுக்கு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு விட்டன. தேர்வு மையங்கள் அதிகப்படுத்தப்பட்டு இருக்கின்றன. சொல்லப்போனால், தமிழ்நாட்டுக்கு ஒரு வருடம் விலக்கு அளித்தது மத்திய அரசு. ஆனால், தி.மு.க இன்னும் இதைவைத்து அரசியல் செய்துகொண்டிருக்கிறது. மருத்துவக் கல்லூரி கட்டி பணம் கொள்ளையடிக்க வேண்டுமென நினைத்த அனைவருக்கும் நீட் பெரிய இடி. ஒரு சீட்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் வாங்கிய இவர்கள், இப்போது நீட் தேர்வால் முழிக்கிறார்கள். ஆகையால் இவர்கள் நீட் வேண்டுமெனச் சொல்கிறார்கள். சாமன்ய மக்களும் பணமின்றி மருத்துவப் படிப்பு படிக்க முடியுமென்பதே நீட் தேர்வின் நோக்கம். நீட் தேர்வு முறை தொடர்வதே மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நல்லது" என்றார்.

தி.மு.க எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன், ``நீட் தேர்வு முறையைக் காங்கிரஸ் கொண்டுவந்தார்கள். அதை அமல்படுத்தவிடாமல் தி.மு.க தடுத்தது. ஆனால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து மாநிலங்களிலும் அதைக் கொண்டுவந்தார்கள்.

டி.கே.எஸ் இளங்கோவன்
டி.கே.எஸ் இளங்கோவன்

2014 வரை நடைமுறைக்கு வராத சட்டத்தை, பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் நடைமுறைக்குக் கொண்டுவந்தது ஏன் என்கிற கேள்விக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் மருத்துவச் சேர்க்கை இருக்க வேண்டுமென எங்கள் தலைவர் கலைஞர் முன்பே தீர்மானம் போட்டார். அவருக்கு எதிராக வழக்கும் தொடுக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றம் எங்களின் பக்கம் நியாயம் இருப்பதைக் கண்டு எங்கள் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியது. ஆகவே, கட் ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைப்பது தொடர்ந்தது.

ஆனால், அதற்குப் பிறகு, பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் எங்கள் தீர்மானத்துக்கு எதிராக வழக்கு போட்டு தீர்ப்பு வாங்கிவிட்டார்கள். அதன் விளைவே நீட் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டது. அந்தச் சட்டத்தை மீண்டும் கொண்டுவரவே தி.மு.க கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறது.

கருணாநிதி
கருணாநிதி
விகடன்

இந்தியாவிலேயே சிறந்த மருத்துவக் கட்டமைப்புடையது தமிழக மாநிலம். நம் மாநிலத்தில் 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கிறது. மருத்துவப் படிப்பில் அதிக இடமிருப்பது தமிழ்நாட்டில்தான். இது தமிழக மாணவர்களுக்காகத் தமிழக அரசு சார்பில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்கிற திட்டத்தை எங்கள் தலைவர் கலைஞர்தான் கொண்டுவந்தார்.

மாநில அரசு உருவாக்கிய இந்த இடத்தை, இந்தக் கட்டமைப்பை மத்திய அரசு கைப்பற்றும் போக்குதான் இந்த நீட். தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்து வைத்ததே மாநில அரசுதானே அன்றி, மத்திய அரசு இல்லையே? அவர்கள் ஜிப்மர், எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளுக்கு மருத்துவர்களை நீட் முறையில் தேர்வு செய்துகொள்ளட்டும். யார் கேட்கப்போகிறார்கள்?

அனிதா
அனிதா

ஆனால், தமிழக மாணவர்களின் கல்விப் பின்னணியை மையப்படுத்தி மாநில அரசு உருவாக்கியதைச் சிதைக்க இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. தி.மு.க., நீட்டிற்கு எதிராகத் தொடர்ந்து போராடி நிச்சயம் தமிழக மாணவர்களை அதிலிருந்து காக்கும்" என்றார்.