Published:Updated:

``நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் தமிழக அரசு தீர்வு காண வேண்டும்" - சி.வி.சண்முகம்

சி.வி. சண்முகம்

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா ஆளுநரால் திருப்பியனுப்பப்பட்டதையடுத்து, "நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மூல அரசு தீர்வு காண வேண்டும்" என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

``நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் தமிழக அரசு தீர்வு காண வேண்டும்" - சி.வி.சண்முகம்

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா ஆளுநரால் திருப்பியனுப்பப்பட்டதையடுத்து, "நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மூல அரசு தீர்வு காண வேண்டும்" என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

Published:Updated:
சி.வி. சண்முகம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலினால் நீட் விலக்கு மசோதா இயற்றப்பட்டு ஆளுநருக்கு தமிழக அரசு சார்பில் 6 மாதங்களுக்கு முன்பாகவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சுமார் 6 மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை, தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். மேலும், தமிழக அரசின் இந்த மசோதாவை அரசுக்கே திருப்பியனுப்பியதற்கான காரணங்களை பிப்ரவரி 1-ம் தேதியே தமிழக அரசுக்கு விளக்கி விட்டதாகவும் ஆளுநர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. அதில், பொருளாதார ரீதியாக நீட் தேர்வு மாணவர்களை காக்கிறது, மேலும் தமிழக அரசின் இந்த மசோதா, வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை
ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை

இந்த நிலையில், நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், ``நீட் விலக்கு மசோதாவில் குறைகள் இருப்பின் அரசு அதனை நிவர்த்தி செய்து மீண்டும் ஆளுநருக்கு வேண்டும். மேலும் நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் அரசு தீர்வு காணவேண்டும்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக இதுகுறித்து கருத்து தெரிவித்த எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ``சுயநல அரசியலுக்காக மாணவர்களின் நலனோடு தமிழக அரசு விளையாட வேண்டாம். நீட் தேர்வு மூலம் வெளிப்படையான மாணவர் சேர்க்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார்.