Published:Updated:

`23 அரியர் க்ளியர்' மாணவரின் சிலாகிப்பும், கல்வியில் அரசியலும்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அந்த விளம்பரம் அனைத்துத் தமிழ் நாளிதழ்களிலும் வெளியானதன் பின்னணி என்ன? தற்போது கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளின் உண்மை நிலவரம் என்ன?

திருச்சி கிராப்பட்டியைச் சேர்ந்தவர் சஞ்சய். வீட்டுக்கு ஒரே பிள்ளை. 10-ம் வகுப்பில் 427 மார்க். +2விலும் குறைவில்லை, 905. ஒரு பொறியியல் கல்லூரியில் இ.சி.இ சேர்ந்தார்.

"ஸ்கூல்ல எல்லாத்தையும் மனப்பாடம் பண்ணி எழுதுவோம். இன்ஜினீயரிங்ல ஒண்ணுமே புரியலே. முதல் செம்ல 6 பேப்பர். போராடி 5 பாஸ் பண்ணிட்டேன். ரெண்டாவது, மூணாவது செம்ல அஞ்சஞ்சு அரியர். நாலாவது, அஞ்சாவதுல ஆறு ஆறு... ஆகமொத்தம் 23 அரியர். பசங்களெல்லாம் ஒண்ணு ரெண்டு அரியர் இருந்தாலே புலம்பித் தீத்திருவானுங்க.

அரியர் அரசியல்
அரியர் அரசியல்

'எல்லாத்தையும் மேல இருக்கவங்க பாத்துக்குவாங்க'ன்னு விட்டுட்டேன். ஆனா, நாலாவது வருஷத்துல சிக்கல் வந்திருச்சு. முதல் வருஷத்துல எல்லா பேப்பரையும் க்ளியர் பண்ணியிருந்தாதான் நாலாவது வருஷம் போகமுடியும். இல்லேன்னா ஜூனியர்ஸ்கூட உக்காந்து படிக்கணும்.

சரி, எப்படியாவது கஷ்டப்பட்டு முதல்வருடத்துல இருக்கிற ஒரு அரியரை கிளீயர் பண்ணிடலாம்ன்னு எக்ஸாம் பீஸ் கட்டப்போனேன். ஒரு பேப்பருக்கெல்லாம் கட்டமுடியாது... எல்லாப் பேப்பருக்கும் பீஸ் கட்டுங்கன்னு சொன்னாங்க. நானும் 23 பேப்பருக்கும் கட்டிட்டு வந்துட்டேன். நல்லவங்களை ஆண்டவன் கைவிடமாட்டான். இப்போ பீஸ் கட்டியிருந்தாலே தேர்ச்சின்னு முதலமைச்சர் சொல்லிட்டாரு... மொத்தப் பேப்பரும் கிளீயர்..." உற்சாகம் பொங்கப் பேசுகிறார் சஞ்சய்.

வேடிக்கையாகத்தான் இருக்கிறது, தமிழகத்தின் கல்விச்சூழல். மொத்த இயல்பையும் புரட்டிப்போட்ட கொரோனாவால் கல்வியும் நியூ நார்மலாகிவிட்டது. ஊடகங்களில் முதல்வர் எடப்பாடியைக் கடவுள் ரேஞ்சுக்கு வைத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் அரியர் மாணவர்கள்.

10-ம் வகுப்பு மாணவர்கள் எல்லோரும் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டபோதே மாணவர்கள் பலரும் முதல்வர் எடப்பாடியைக் கொண்டாடினார்கள். அந்த பல்ஸைப் புரிந்துகொண்டு, சோசியல் மீடியா விங்குகள் விழித்துக்கொண்டன. கல்லூரிப் பருவத் தேர்வுகள் பற்றிய அறிவிப்பு வெளிவந்ததுமே சோசியல் மீடியாக்களில் எடப்பாடி சூப்பர் ஹீரோவாகிவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
ம.அரவிந்த்

மாணவர்களின் ஓட்டு குறிவைக்கப் படுவதைக் கவனித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், 'அதென்ன, தேர்வுக்கட்டணம் கட்டியவர்கள் மட்டும்... மொத்தப் பேரையும் பாஸ் போடுங்கப்பா' என்று அறிக்கை விடுக்க, அந்தப் பக்கமும் கொஞ்சம் ஸ்கோர் போனது.

முதல்வர் எடப்பாடி, கல்லூரிப் பருவத்தேர்வுகளில் இருந்து விலக்கு அறிவித்த மறுநாள் பத்திரிகைகளில் வெளிவந்த முழுபக்க விளம்பரம் தமிழகத்தை அதிர வைத்தது. சென்னையின் அத்தனை அடையாளங்களையும் பின்னணியில் வைத்து எடப்பாடி புன்னகையோடு கைகூப்பி நிற்க, 'மாணவர்களின் மனிதக் கடவுளே, எங்கள் ஓட்டு உங்களுக்கே' என்ற வாசகங்கள் மட்டுமே அந்த விளம்பரத்தில் இருந்தன.

> அந்த விளம்பரம் அனைத்துத் தமிழ் நாளிதழ்களிலும் வெளியானதன் பின்னணி என்ன?

> தற்போது கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளின் உண்மை நிலவரம் என்ன?

- முழுமையான அலர்ட் கவர்ஸ்டோரியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > ஆல் க்ளியர் அரியர், 10 கோடி பப்ளிசிட்டி, ஆன்லைன் அலப்பறைகள்! https://bit.ly/2EWvVzP

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற > https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு