Published:Updated:

“இடைநிற்றலை ஊக்குவிக்கும் வரைவு”: வரைவு NHEQF குறித்து கல்வியாளர்கள் விமர்சனம்!

உயர்கல்வி

வரைவின்படி அனைத்து இளங்கலை படிப்பிற்கும் நுழைவுத் தேர்வு இருப்பது மாணவர்களுக்குப் பாரமாகிறது. அதுமட்டுமல்லாமல் நுழைவுத் தேர்வுகள் பயிற்சி மையங்களை அதிகளவில் ஊக்குவிக்கின்றன.

“இடைநிற்றலை ஊக்குவிக்கும் வரைவு”: வரைவு NHEQF குறித்து கல்வியாளர்கள் விமர்சனம்!

வரைவின்படி அனைத்து இளங்கலை படிப்பிற்கும் நுழைவுத் தேர்வு இருப்பது மாணவர்களுக்குப் பாரமாகிறது. அதுமட்டுமல்லாமல் நுழைவுத் தேர்வுகள் பயிற்சி மையங்களை அதிகளவில் ஊக்குவிக்கின்றன.

Published:Updated:
உயர்கல்வி

தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்புக்கான (National Higher education qualification framework) வரைவை கடந்த பிப்ரவரி 1-ம் தேதி இந்திய அரசாங்கம் வெளியிட்டது. வரைவு வெளியானது முதலே பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், கருத்துக் கேட்புக்கான கால அவகாசமும் மிகக் குறைவாக வழங்கப்பட்டிருந்தது மேலதிக விமர்சனங்களைக் கொண்டுவந்தது. வரைவுக்கான கருத்துகேட்புக் காலம் பிப்ரவரி 21 முடிந்துவிட்ட நிலையில், இந்திய மொழிகளில் இது வெளியிடப்பட்டிருக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

கல்வி
கல்வி

இப்படி ஒரு வரைவு வெளியாகியிருப்பதே பெரும்பாலான மாணவர்களுக்கும் பொதுமக்களுக்குமே தெரியவில்லை. மிகக் கடுமையான விமர்சனங்கள் இந்த வரைவை நோக்கி முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த வரைவு குறித்த கருத்துக்களைக் கல்வியார்கள் இங்கு பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி இதுகுறித்துப் பேசும்போது, “34 ஆண்டுகளுக்குப் பிறகு கல்வியில் ஒரு மாற்றம் என்பது வரவேற்கத்தக்கது. இந்த வரைவானது தமிழகத்திலும் இந்தியாவிலும் ஓரிரு ஆண்டுகளில் அரசியல்ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்குப் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு இல்லை. 12-ம் வகுப்பிலும் செமஸ்டர் அடிப்படையில்தான் தேர்வு நடக்கும் என்பவை தேசிய உயர்கல்வித் தகுதிக் கட்டமைப்பு வரைவில் உள்ள வரவேற்கத்தக்க அம்சங்கள்,” என்றார்.

கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி
கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி

தொடர்ந்து பேசிய அவர், “வரைவின்படி அனைத்து இளங்கலை படிப்பிற்கும் நுழைவுத் தேர்வு இருப்பது மாணவர்களுக்குப் பாரமாகிறது. அதுமட்டுமல்லாமல் நுழைவுத் தேர்வுகள் பயிற்சி மையங்களை அதிகளவில் ஊக்குவிக்கின்றன. கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் பயிற்சி மையங்களில் கட்டணம் செலுத்தி பயிற்சி பெற இயலுமா என்பது கேள்விக்குறி. அதனால் 12-ம் வகுப்புப் பாடத் திட்டத்தை இன்னும் சிறப்பாக்கி அந்தப் பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கையை நடைமுறைப்படுத்துவது சிறந்தது. அனைத்து துறைக்கும் நுழைவுத் தேர்வு என்பது அனைவரையும் சிரமத்துக்கு உள்ளாக்கும். கல்வியில் மாற்றங்களை கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு புரிதலுடன் ஏற்படுத்த வேண்டுமே தவிர மாபெரும் மாற்றத்தை உடனடியாக செயல்படுத்துவது சிரமத்தை ஏற்படுத்தும்,” என்கிறார் ஜெயபிரகாஷ் காந்தி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு இதுகுறித்துப் பேசும்போது, “கல்வியை வியாபாரமாக்கும் போக்குதான் GATS ஒப்பந்தம். அதன் அடிப்படையில்தான் இந்தியாவில் தேசியக் கல்விக் கொள்கை, (National education policy), தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு (National higher education qualification framework) ஆகியவை கொண்டுவரப்பட்டுள்ளன. கல்வி என்பது பணம் சம்பாதிக்கும் வணிகத்தளமாக இருக்கக் கூடாது. இளங்கலை பட்டப்படிப்புடன் தொழில்திறன் மற்றும் தொழிற்கல்வியை இணைப்பது மறைமுகமாகக் குலக்கல்வியை ஊக்குவிக்கும் திட்டம்தான். இந்தத் திட்டம் மாணவரின் பட்டப்படிப்பில் கவனச்சிதறலைக் கொண்டுவரும். பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் வேறு ஏதாவது தொழிலில் ஈடுபட விரும்பினால் அது அவர்களது விருப்பமாகவே இருக்க வேண்டுமே தவிர எந்த ஒரு கட்டாயத்தின் அடிப்படையிலும் இருக்கக் கூடாது,” என்றார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

“இளங்கலை படிப்பில் எந்த ஆண்டும் விடைபெற்றுக்கொள்ளலாம் என்பது இடைநிற்றலை அதிகப்படுத்தும். நம் சமூகத்தில் சாதிய பொருளாதார அடிப்படையில் ஒடுக்குமுறையைச் சந்தித்து கல்லூரி படிப்பைத் தொடங்கும் மாணவர்கள் ஆரம்பத்தில் நிறைய தடுமாறுவார்கள். இடையிலேயே நின்றுவிடலாம் என்ற எண்ணமும் அவர்களை எட்டிப்பார்க்கும். அவர்களைத் தேற்றி ஆறுதல்படுத்தி படிப்பைத் தொடர ஊக்குவிக்கவேண்டும். ஆனால், இந்த வரைவு இடைநிற்றலை ஊக்குவிக்கிறது. இவற்றுக்குத் தீர்வு பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதுதான்,” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism